கொரோனா ஊரடங்கால் மக்கள் முடங்கியதால் வீட்டு விழாக்கள், அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் பூக்கள் வாங்க ஆளில்லை. கோயில்களும் மூடப்பட்டதால் பூக்கள் தேவை முற்றிலும் இல்லாமல் இருந்தது. அதனால், விவசாயிகள் பூக்களைப் பறிக்காமல் செடி களிலேயே விட்டனர். வருமானம் இன்றி செடிகளையும் பராமரிக்க முடியவில்லை. அதனால், சந்தைக்கு பூக்கள் வரத்து குறைவாக இருந்தது.  ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட பின் பூவின் விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்தது.

 



 

தென்மாவட்டங்களில் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட் போன்றவை முக்கியமானவை. இந்த மார்க்கெட்களுக்கு மல்லிகைப் பூக்கள் வரத்துக் குறைந்ததால் அதன் விலை முகூர்த்தம் மற்றும் விழாக்கள் இல்லாத நாட்களில்கூட அதிகமாக இருந்தது. இந்நிலையில் தற்போது முகூர்த்த நாளிலான இன்று விலை உச்சம் தொட்டுள்ளது. மாட்டுத்தாவணி பூ மார்க் கெட்டில்  ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.4000 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

 

 

 



 

 

மதுரையில் மல்லி விலை இன்று உச்சம் தொட்டது ! (12.12.2021)

 

 கிலோ மல்லிகைப் பூ  -  ரூ. 4,000 

 

அரளிப் பூ கிலோ - ரூ.400 

 

முல்லைப் பூ கிலோ -  ரூ 1500

 

பிச்சிப்பூ கிலோ -   ரூ. 1500

 

சம்மங்கிப் பூ கிலோ - ரூ.250 

 

 செண்டு மல்லி கிலோ - ரூ. 200

 

பட்டன் ரோஸ் கிலோ - ரூ. 300

 

தாமரை ஒரு பூ - ரூ.25



இது குறித்து மதுரை பூ மார்கெட் சங்க நிர்வாகி ராமசந்திரன் கூறுகையில்..., ‘‘ தொடர் மழை காரணமா பூக்கள் வரத்துக் குறைவாக உள்ளதால், அனைத்து வகைப் பூக்களின் விலையும் தற்போது உயர்ந்துள்ளது. அதில் மல்லிகைப்பூ வரத்து மொத்தமாகச் சரிந்ததால் அதன் விலை  விலை உயர்ந்துள்ளது. இந்த வருடத்தில் இன்று தான் மல்லிகை விலை உச்சம் தொட்டுள்ளது.’’ என்றனர்.