1. சிவகங்கை மத்திய நறுமணப் பூங்காவுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு நகர் ஊரமைப்புத் துறை அனுமதி அளித்துள்ளது.
2. சிவகங்கையில் மாவட்ட நீதிமன்றம் உட்பட 14 நீதிமன்றங்கள் உள்ளன. இதனால் இப்பகுதியில் சட்டக் கல்லூரி தொடங்க வேண்டுமென அப்பகுதி, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பெட்ரோல் பங்க்கில் தண்ணீர் கலந்த பெட் ரோல் விற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த பங்க்குக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
4. தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 2 ½ லட்சம் மதிப்புள்ள 385 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக காரில் ஏற்றி வந்த 2 பேர் கைது - புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
5. ராமேஸ்வரத்தில் வெளி இடங்களில் இருந்துவரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக ராமேஸ்வரம் பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி சுங்கச்சாவடி முன்பு சுகாதாரத்துறையினர் அனைத்து வெளிமாநில வாகனங்களையும் நிறுத்தி அதில் வருபவர்களை பரிசோதனை செய்கின்றனர்.
6. ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் டால்பின், கடல் பசு, ஆமை, பல அரிய வகையான மீன்கள் வாழ்ந்து வருகின்றன. இதைத்தவிர ஆழ்கடல் பகுதியில் திமிங்கலங்களும் உள்ளன. இந்த நிலையில் அழகன்குளம் கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கிக் கிடப்பதாக வன பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த திமிங்கலத்தின் எடை 2 டன் இருக்கலாம் என தெரிவித்தனர்.
7. மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஆதிதிராவிடர் குடியிருப்பு வீடுகள் இடிந்துவிழும் நிலையில் இருப்பதால் விரைவில் புதிய வீடுகள் கட்டித் தரவும் அதுவரை அவர்கள் தங்குவதற்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து தரவும் கோரிய வழக்கு, மோசமாக உள்ள தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு புதிய வீடுகள் கட்டும் திட்டத்திற்கு நிதி வழங்குவதற்கு கலெக்டர் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். டிசம்பர் 31-க்குள் கட்டுமான பணிகளை துவங்க வேண்டும் அது வரை தற்காலிக மாற்று இட வசதி செய்து கொடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
8. மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் கோட்டைவாயில் அருகில் திருக்கோயில் நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துவதுறை இணைந்து நாள்தோறும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
9. விருதுநகர் அருகே தேர்தல் முன்விரோதத்துக்கு பழி தீர்க்க நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 வெடிகுண்டுகள், மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
10. மதுரை மாவட்டம் அவனியாபுரம் வெள்ளக்கல் பாசன கால்வாய் தண்ணீரிலிருந்து வெண் பஞ்சு போல நுரை பொங்கியதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
11. மதுரையில் மல்லி விலை இன்று உச்சம் தொட்டது. கிலோ மல்லிகைப் பூ ரூ. 4,000 வரை விற்பனை