மதகுபட்டி அருகே மின் இணைப்பிற்கு ரசீது வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக அலவாக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.






 

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகேவுள்ளது அலவாக்கோட்டை கிராமம். இங்கு ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரகாஷம். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி இளம் கம்பன் என்பவர் தன்னுடைய நிலத்தில் செங்கல் சூளை அமைக்கவும் அதற்கான மின் இணைப்பை பெற ஊராட்சி ரசீது தேவைப்பட்டதால் தலைவர் பிரகாசத்தை நாடியுள்ளார்.



 


 

அதற்கு அவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில் இளம் கம்பன் சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை  போலீசில் புகார் செய்த நிலையில் அவர்களின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய பணத்தை அலவாக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்தே இளம் கம்பன் வழங்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

 

ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிக்கும் பிரகசம் தொடர்ந்து கிராம மக்களிடம் லஞ்சம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக ரசீது வழங்குவதற்கு ரூ.10 ஆயிரம் பெற்றதற்கு சிக்கியுள்ளார். தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகள் இருந்தால் தான் லஞ்சம் வாங்குவதில் அச்சம் இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

 

ஊராட்சி மன்ற தலைவர் லஞ்சம் வாங்கியது தொடர்பாக கைது செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர