பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க அம்பாசமுத்திரம், ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06004) திருநெல்வேலியில் இருந்து செப்டம்பர் 18 முதல் ஜனவரி 29 வரை ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 07.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் தாம்பரம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் ( 06003 ) தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 19 முதல் ஜனவரி 30 வரை திங்கட்கிழமைகளில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.40 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்களுக்கான முன் பதிவு இன்று காலை 08.00 மணிக்கு தொடங்கியது குறிப்பிடதக்கது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரையில் கரை புரண்டோடும் வைகை - போக்குவரத்து பாதிப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்