மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

   நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில்  மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா பேசுகையில் :-




அதிமுகவில் மாவட்ட செயலாளர் ஒன்றிய செயலாளர் நகரச் செயலாளர் பொறுப்புகளைவிட கிளைக் கழகச் செயலாளர் பொறுப்பு தான் முக்கியம் பொதுக்குழுவில் கிளைக் கழக உறுப்பினர்கள் கிளைக் கழகச் செயலாளர்கள் சொல்லக்கூடிய கருத்தைத் தான் மாவட்ட செயலாளர்களாகிய நாங்கள் பொதுக்குழுவில் எடுத்துக் கூறுவோம், திமுகவினர் கலைஞர் கருணாநிதி பெயரில் நூலகம் கட்டுகிறார்கள். மணிமண்டபம் கட்டுகிறார்கள். வீதிக்கு வீதி கலைஞர் கருணாநிதி சிலையைத் திறக்கிறார்கள். கலைஞர் கருணாநிதி பெயரை வைக்க துடிக்கிறார்கள் ஆனால் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். குறிப்பாக  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நிறைவின் போது எம்ஜிஆர் சிலையை திறக்க எம்ஜிஆர் பெயரை வீதிக்கு வைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை


அதிமுக தொண்டர்கள் யாரும் திமுகவினர் இடம் தொடர்பு வைத்திருக்க கூடாது. திமுகவினர் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல குடும்ப பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் திட்டம் கொடுக்கமாட்டார்கள்.  தரவுகளை  புள்ளிவிவரத்தை வைத்து கொடுப்போம்  என்று நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகிறார். தரவின் படி அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் முதியோர் உதவித்தொகை வாங்குபவர்கள் 100 நாள் வேலை பார்க்கும் பெண்கள் ஆகியோருக்கு தர மாட்டார்கள்.




தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் கெட்டு கிடக்கிறது. தினமும் கொலை நடக்கிறது. அங்கே வியாபாரம் தலைவிரித்தாடுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது அப்பொழுது அதிமுக ஆட்சி மலரும் மிக விரைவில் திமுக ஆட்சி கலைக்கப்படும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் வரும் நமக்கு ஒரு தலைமை வேண்டும் திறமையான தலைமை வேண்டும் அ.தி.மு.க.வை யார் காப்பாற்றுவார்களோ இரட்டை இலையை யார் காப்பாற்றுவார்களோஅவர்களது தலைமையை தான்  தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இந்த நேரத்தில் நல்ல தலைமையை உரிய தலைமையை நாம் ஏற்றுக் கொள்வோம் . ஆனால் இந்த கட்சி அதிமுக வை யாரும் அசைக்க முடியாது.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் அதிக பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள் ஆதரவு இருந்தால் மாற்றலாம்.


அதேபோலத்தான் பொது குழுவில் கட்சித் தலைமையை மாற்ற வாய்ப்பு இருக்கிறது.அதே போலத்தான் இந்த பொதுக்குழுவில் கட்சியை திறமையாக நடத்தக்கூடிய தலைமை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது . அதிமுக ஆட்சியை நான்கு ஆண்டுகள் சிறப்பாக நடத்தியவருக்குத் தான் வாய்ப்பு இருக்கிறது. சட்டமன்றத்தில் அம்மா ஜெயலலிதா படத்தை திறப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது.  எடப்பாடியார் தான் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து அம்மா கூடத்தை திறந்து வைத்தார்.




ஓராண்டில் அதிமுக ஆட்சி போய்விடும் இரண்டாண்டில் அதிமுக ஆட்சி போய்விடும் என்று கூறியவர்கள் மத்தியில் நான்கு ஆண்டுகள் அதிமுக ஆட்சியை நடத்தி காண்பித்தவர் எடப்பாடியார். கிளை கழக நிர்வாகிகளாகிய உங்களுடைய கருத்துகளை நாங்கள் பொதுக்குழுவில் கூற இருக்கிறோம். அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் நினைத்தால் பொதுச் செயலாளர் பதவி வந்துதான் தீரும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சி தலைவி போல ஒரு தலைமை அந்த ஒரு தலைமையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்  அதற்குத்தான் நாம் பாடுபடுகிறோம்.




ஆலோசனை கூட்டம் நடந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா பேசும்போது


கட்சியை கட்டிக் காப்பாற்றும் ஒருவருக்காக மற்றோருவர் தலைமையை விட்டுக் கொடுக்க வேண்டும் எனவும்,  ஒற்றை தலைமை என்ற விவாதம் எழுந்து உள்ளது அதனால் அதற்கு முடிவு ஏற்பட பொது குழுவில் வாய்ப்புள்ளது.


சட்டத்தில் மாறுதல் செய்வது தவறில்லை சட்ட திருத்தம் செய்வது புதிதல்ல


மாவட்டச் செயலாளர் 90% பேர் ஒற்றை தலைமையை எதிர்பார்க்கின்றனர்.


நல்ல தலைமையை உருவாக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


கிளைக் கழகச் செயலாளர் தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றப் போகிறோம், அவர்கள் நல்ல கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.


2019 ஆம் ஆண்டே ஒற்றைத் தலைமையின் கீழ் வர வேண்டும் என தான் கூறினேன்.


மூன்று ஆண்டுகளாக இருவரின் தலைமையை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல் பட்டேன்.


தற்போது பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுப்பதை ஏற்று ஒற்றுமையாக அனைவரும் செயல்பட வேண்டும். அது கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் சரி.


நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை.


ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் மாவட்ட  செயலாளர்கள் கூட்டம் அதிகார பூர்வமான கூட்டம் இல்லை.


 ஜானகி பெருந்தன்மையாக விட்டு கொடுத்தது போல் திறமையானவர்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும்.


கட்சியை கட்டிக் காப்பாற்றும் ஒருவருக்காக மற்றோருவர் தலைமையை விட்டுக் கொடுக்க வேண்டும்.


எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதா தனிக் கட்சி ஆரம்பித்தபோது சேவல் சின்னத்தில் போட்டியிட்டவர் எடப்பாடி பழனிச்சாமி 


எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி.


4 ஆண்டுகள் அதிமுக ஆட்சியை சிறப்பாக நடத்தியவருக்கு மற்றவர் தலைமையை விட்டுக்கொடுக்க வேண்டும் இவ்வாறு பேசி எடப்பாடி பழனிச்சாமிக்கு மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளார் ராஜன் செல்லப்பா.