மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த தும்பைபட்டியில் தியாக சீலர் பூ.கக்கன் அவர்களின் 114- வது பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கக்கன் அவர்களின் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”அக்னிபத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், 10 கோடி பேருக்கு வேலை வழங்குவேன் என கூறிய ஒன்றிய அரசு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிப்பதாகவும், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமியர்களின் வீடு சேதப்படுத்த படுவதை கண்டித்து வரும் 22ம் தேதி தனது தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
தமிழக ஆளுநர் முழுநேர ஆர்.எஸ்.எஸ்காரர்போல் செயல்படுவதாகவும் ஆளுநர் ஆர்.என் ரவியா அல்லது ஆர்.எஸ்.எஸ் ரவியா? என சொல்லக்கூடிய வகையில் அவரது செயல்பாடு அமைந்திருக்கின்றது. அவர் தனது பதவியில் இருந்து விலகிவிட்டு ஆர்.எஸ்.எஸ்., பணியை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். மேலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஒற்றுமையை சீர்குலைக்கும் நாட்டின் பன்முக தன்மைக்கு இது எதிரானது எனவும்” கூறினார்.
மேலும் தனது ட்விட்டர் பக்கதில் திருமாவளவன், ”முதல்முறையாய் ஈகச்சுடர் கக்கனார் மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலைசூட்டி வீரவணக்கம் செலுத்தினோம். விசிக சார்பில் எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மணிமண்டபம் பராமரிப்பின்றிக் கிடப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு மணிமண்டபத்தைப் புதுப்பிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Mylapore Peacock Statue: இறுதிகட்ட விசாரணையில் மயில் சிலை வழக்கு - சிலைகடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி பேட்டி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்