மதுரை - நத்தம் சாலையில் மதுரை செட்டிகுளம் இடையே பிரம்மாண்டமான பறக்கும் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.  சுமார் 544 கோடி செலவில் 7.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பாலம் கட்டப்படுவது குறிப்பிடதக்கது. இந்நிலையில் ஐய்யர்பங்களா அருகில் இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.




 

 Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

 

இந்த விபத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஆகாஷ் சிங் என்று தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்துத் தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



மேலும் மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !

 

மேலும், இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் போலீசார் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் கட்டுமான பணியாளர்களைத் தவிர வேறு யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்காது எனக் கூறப்படுகிறது. இதனால் காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்காது எனக் கூறப்படுகிறது. இருப்பினும், விபத்தின் இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து மீட்புக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன், மதுரை எம்.பி சு.வெங்கடேஷன் உள்ளிட்டோர் பார்வையிட்டு சென்றனர்.

 

இது குறித்து செய்தியாளர்களிடம் சு.வெங்கடேஷன்...,” இன்று மேம்பால கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் இறந்துள்ள செய்தி மிகவும் துயரமானது.  இதிலே இரண்டு விஷயங்களை கவனப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.  ஒன்று, இந்த வேலை நடந்து கொண்டு இருந்த பொழுது இரண்டு பேர் மட்டுமே பணியில் இருந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள். இவ்வளவு பெரிய பணியில் இரண்டு பேர் மட்டுமே இருந்ததாக கூறுவது சந்தேகத்தை எழுப்புகிறது. மிகக்குறைந்த தொழிலாளர்களை ஈடுபத்தியது தான் விபத்துக்கு காரணமா? என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவது, தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா? என்ற கேள்வியும் எழுகிறது. இவைகள் குறித்தும், விபத்தின் முழுத்தன்மை குறித்தும் மாவட்ட ஆட்சியர் முழு விசாரணை மேற்றகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.