சவுக்கு சங்கர்
பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர் யூ டியூப் சேனல் ஒன்றிக்கு அளித்த நேர்காணலில், காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை சவுக்கு சங்கர் தெரிவித்தாக கூறப்படுகிறது. இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுகன்யா புகார் அளித்தார்.
இதன்பேரில் சவுக்கு சங்கர் மீது பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், ஒரு பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் வகையில் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கடந்த 4-ம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரை சிறைக்கு மாற்ற கோரிக்கை
அந்த கைது நடவடிக்கையின் போது போது கஞ்சா வைத்திருந்ததாக சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிந்தனர். அந்த வழக்கில் சவுக்குசங்கர் நேற்று (மே 7) மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக கோவையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிபதி செங்கமலச் செல்வன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, கோவை சிறையில் 10 காவலர்கள் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும், கோவை சிறையில் தனக்கு பாதுகாப்பில்லை எனவும் எனக்கூறி மதுரை சிறைக்கு தஞ்சை மாற்றுமாறு சவுக்கு சங்கர் கோரிக்கை விடுத்தார். மே 22 வரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, கோவை சிறைக்கு சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார். சவுக்கு சங்கருக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற வாயிலில் போராட்டம் நடத்திய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அவர் அழைத்து செல்லப்பட்ட வாகனம் மீது துடைப்பங்களை வீசி எறிந்து கோஷமிட்டனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - இளம் பெண்ணிடம் போன் நம்பர் கேட்ட விவகாரம்; தொழிலாளி தலை துண்டித்து படுகொலை - நிலக்கோட்டை அருகே பயங்கரம்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Fahadh Faasil: "புஷ்பா படத்தால ஒரு பிரயோஜனமும் இல்ல" பகத் ஃபாசில் ஓபன் டாக்!