குழந்தை பாதுகாப்பு எண்களை பாடபுத்தகங்களில் சேர்க்க கோரி வழக்கு-பள்ளிக்கல்வித்துறை பதில்தர உத்தரவு
’’குழந்தைகளின் சட்ட உரிமை குறித்து பள்ளி பருவத்திலிருந்தே கற்பிக்க வேண்டியது கடமையாக உள்ளது’’
Continues below advertisement

மதுரை_உயர்நீதிமன்ற_கிளை,
தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில், குழந்தைகளுக்கான உதவி எண், காவல்துறை உதவி எண் போன்ற விவரங்களை பாடப்புத்தகத்தில் சேர்க்கக் கோரி வழக்கு. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், இயக்குநர் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த செந்தில் என்பவர் உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திதார். அந்த பொதுநல மனுவில், " கொரோனா நோய்த்தொற்று காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.

அதற்கு போதுமான சட்ட அறிவு குறித்த விழிப்புணர்வு இன்மையே காரணம் ஆகும். ஆகவே குழந்தைகளின் சட்ட உரிமை குறித்து பள்ளி பருவத்திலிருந்தே கற்பிக்க வேண்டியது கடமையாக உள்ளது. கேரள அரசின் பாடப்புத்தகத்தில் பள்ளி குழந்தைகள் உரிமை எனும் தலைப்பில் வாழ்வுரிமை உள்ளிட்டவை குறித்து விபரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதோடு குற்றத்தடுப்பு எண், இலவச உதவி எண், கேரள காவல்துறையினரின் உதவி எண் ஆகியவையும் அச்சிடப்பட்டுள்ளன. ஆகவே தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில், குழந்தைகளுக்கான உதவி எண், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் விதிகள், காவல்துறை உதவி எண் போன்ற விவரங்களை பாடப்புத்தகத்தில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என பொது நல மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு, இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
விநாயகர் சிலைகளை கரைப்பது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராஜபாளையத்தை சேர்ந்த ராமராஜ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார் அதில், ராஜபாளையத்தில் உள்ள வழிவிடு விநாயகர் கோவிலில் 33 வருடங்களாக மாப்பிள்ளை விநாயகர் மன்றம் சார்பாக விநாயகர் சதுர்த்தி மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்தது கொரோனா தொற்றின் காரணமாக இந்த வருடம் தமிழ்நாடு அரசு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாடவும் கூட்டமாக நீர்நிலைகளில் சென்று கரைக்கவும் அனுமதி மறுத்துள்ளது. வழிவிடு விநாயகர் கோவிலில் 6 விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு அதை தனிநபராக டிராக்டரில் தனித்தனியாக ஒவ்வொன்றாக டிராக்டர் மூலம் எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கவேண்டும்.
மேலும் அரசின் கொரோனா தொற்று பாதுகாப்பு அனைத்து கட்டுப்பாடுகளையும் பின் பற்றி முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்றும் எந்தவித கூட்டமும் சேராமல் பாதுகாப்பு விதிமுறை களை பின்பற்றி கோவில் உள்ள சிலைகளை மட்டும் எடுத்துச்சென்று கரைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் அனுமதித்து உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விநாயகர் சதுர்த்தி முடிந்துவிட்டதால் உடனடியாக இந்து அறநிலையத் துறை சார்பாக சிலைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார். மனுதாரர் தரப்பில் - விநாயகர் சதுர்த்தி முடிந்ததால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏதுமில்லை கொரோனா விதிகளை பின்பற்றி நாங்களே எடுத்துச் சென்று வைத்துக் கொள்கிறோம் அனுமதிக்க வேண்டும் என வாதிட்டனர்.
இதனை பதிவு செய்த நீதிபதி இந்து அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து தற்போது கொரோனா விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் வரும் ஒன்றாம் தேதி வரை சிலைகள் அங்கே இருக்கட்டும் ஒன்றாம் தேதிக்கு மேல் அரசின் சார்பில் தளர்வுகள் விதிக்கப்பட்டால் மனுதாரரின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.