மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த போலக்காபட்டியைச் சேர்ந்த பெரியகருப்பன் என்பவரது மகன் உதயக்குமார் என்பவருக்கு தேனியைச் சேர்ந்த மணி - சந்திரா தம்பதியின் 14 வயது மகளை கடந்த ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர். குழந்தை திருமணம் என்பதை மறைத்து போலக்காபட்டியில் உள்ள தோட்டத்து வீட்டில் இருவரும் வசித்து வந்த சூழலில் 






7 மாத கர்ப்பிணியாக இருந்த இந்த 14 வயது குழந்தைக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டதாகவும், போலக்காபட்டியில் உள்ள உதயக்குமார் வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்து சற்று நேரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.




 

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல் நிலைய போலீசார்., உயிரிழந்த குழந்தையை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு குழந்தை திருமணம் செய்து வைத்தது தொடர்பாகவும், 14 வயது குழந்தையை கர்ப்பிணியாக்கியது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



உசிலம்பட்டி பகுதியில் குழந்தைத் திருமணம் மற்றும் பெண் சிசுக்கொலைகள், தற்போதைய காலகட்டத்திலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதில் பிரச்னை ஏற்படுவது மட்டும் வெளியே தெரிகிறது. மற்றவனை மூடி மறைக்கப்படுகிறது. எனவே உசிலம்பட்டி பகுதியில் அதிகப்படியான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும், அதே போல் சட்ட திட்டங்களை பற்றி பொதுமக்களிடம் விளக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




 

உசிலம்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை திருமணம், போக்சோ உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக வழக்கில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.