தமிழகத்தில் மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதே போல் மதுரையில் பல்வேறு இடங்களில் காலை முதல் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தொட்டப்பநாயக்கணூர், உத்தப்பநாயக்கணூர், சேடபட்டி, எழுமலை, செல்லம்பட்டி, கருமாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கனமழை கொட்டித் தீர்த்தது,





 

இதில் உசிலம்பட்டி அருகே வளையபட்டியைச் சேர்ந்த காசி என்பவருக்கு சொந்தமான இரு பசுமாடுகளை அவர் மேய்ச்சலுக்காக வயல் வெளியில் கட்டி வைத்திருந்த நிலையில் திடீரென மின்னல் தாக்கியதில் இரு பசுமாடுகளும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தன., தகவறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



மேலும் சில மதுரை செய்தி

 

மதுரையில் போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுத்த 15க்கும் மேற்பட்டோர் கைது !

 

தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் பேருந்து நிலையங்கள், சுற்றுலா ஸ்தலங்கள், ஆன்மீக ஸ்தலங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பிச்சையெடுக்கும் நபர்களை மீட்டு அவர்களை உரிய உதவி செய்து அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகங்களில் தங்க வைக்க வேண்டும் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதையடுத்து பல்வேறு மாவட்டங்களிலும் பிச்சைக்காரர்கள் மீட்கப்படுகின்றனர்.



 

இந்நிலையில் மதுரை மேல மடை சிக்னல் அருகே பயணிகளிடம் தொந்தரவு செய்து பணம் கேட்டதாக 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் அவர்களை எச்சரித்து விடுவித்தனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பத்திரமாக காப்பகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

 





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்