இளைய தளபதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் 1993 -ஆம் ஆண்டு தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து கடந்த 30 ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
நடிகர் விஜயின் திரையுலக பயணத்தை தொடங்கி 30 ஆண்டுகளாகிய நிலையில் இதனை கொண்டாடும் விதமாக தமிழகமெங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் நடிகர் விஜய் ரசிகர்கள் செய்து வருகின்றனர். இந்த வகையில் மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆண்கள், பெண்களுக்கு இலவசமாக பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
மதுரை மாட்டுத்தாவணி முதல் ஆரப்பாளையம் செல்லும் வழித்தடத்தில் செல்லும் 2 பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இன்று ஒரு நாள் விஜய் ரசிகர்கள் டிக்கெட்டுகளை எடுத்து பயணிகளுக்கு வழங்கினர்.
அரசு பேருந்துகளில் பெண்களுக்கு மட்டும் இலவச டிக்கெட் வழங்கிய நிலையில் ஆண்களுக்கும் இலவச டிக்கெட்டுகளை விஜய் ரசிகர்கள் வழங்கினர். மேலும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமூட்டினார்.
இதைப்படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - குழந்தைகளுக்கு விலையில்லா ரொட்டி, பால், முட்டை ஒரு வருடம் வழங்க முடிவு ; விஜய் ரசிகர்களின் அசத்தில் திட்டம் !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்