மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பகுதியில் மையிட்டான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் - நாகலட்சுமி தம்பதிகளுக்கு சங்கீதா, விஜய தர்ஷினி, தேன் மொழி, சண்முகப் பிரியா, பாண்டி சிவானி என ஐந்து குழந்தைகள் உள்ளனர். நாகலெட்சுமி மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்துவருதால் இவருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.அனீஷ் சேகர், 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக பணி வழங்கி ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், சில நாட்களாக நாகலட்சுமி பணிக்கு சென்ற போது மையிட்டான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன் மற்றும் கிளர்க் முத்து ஆகியோர் நாகலட்சுமியை தகாத வார்த்தையில் பேசி இப்பணியினை உனக்கு தர இயலாது எனக் கூறி மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த நாகலட்சுமி இன்று மதியம் மையிட்டான் பட்டி கிராமத்திலிருந்து திருமங்கலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல பேருந்தில் தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது சிவரக்கோட்டை பகுதிக்கு அரசு பேருந்து வந்த பொழுது நாகலட்சுமி தன்னுடைய 2 குழந்தைகளை அருகில் பயணம் செய்த சக பயணிகளிடம் குழந்தைகளை கொடுத்துவிட்டு திடீரென பேருந்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பேருந்தில் இருந்து குதித்ததால் ஓட்டுநர் உடனடியாக பேருந்து நிறுத்தி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.
மேலும் காவல்துறையினர் விசாரணையில் இறந்த நாகலட்சுமியின் கைப்பையில் கடிதம் ஒன்று இருந்தது. அந்த கடிதத்தில் ”100 நாள் வேலை பொறுப்பாளராக பணிபுரிய கலெக்டர் பணி வழங்கியதாகவும் அந்த வேலையை தனக்கு வழங்க மாட்டேன் என்று மையிட்டான்பட்டி வார்டு உறுப்பினர்கள் வீரகுமார், பாலமுருகன் மற்றும் கிளார்க் முத்து ஆகியோர் தவறாக பேசி மனதை காயப்படுத்தியதாகவும் அதற்காக தான் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகும். புகார் அளித்ததற்கு ஏன் புகார் அளிக்கிறாய் என்று தகாத வார்த்தைகளால் திட்டி தற்கொலை முயற்சிக்கு என்னை ஆளாக்கியதாகவும் தனக்கு ஐந்து பெண் குழந்தைகள் உள்ளது. அதனால் வேலை கேட்டது தவறா?” என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தனது தற்கொலை முயற்சிக்கு முக்கிய காரணம் மையிட்டான்பட்டி கிளார்க் முத்து வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன் என்னை அடிக்க கை ஓங்கி அசிங்கப்படுத்தியது தான் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பணிக்கு செல்ல விடாமல் மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இறந்த நாகலட்சுமியின் கைக்குழந்தைகள் அழுதது பார்ப்போர் கண்களில் கண்ணீர் வரவழைத்தது.
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்