மதுரை ரயில் விபத்தில் உடைமைகளை இழந்தவர்களை ரயில் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காத்திருப்பு அறைக்குச் சென்று பொது மேலாளர் ஆர். என். சிங் மற்றும் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி பொன்வசந்த் நேரில் சந்தித்து ஆறுதலை தெரிவித்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட 3 லட்ச ரூபாய் இழப்பீடு தொகையை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.


 






இதனைத் தொடர்ந்து ரயில்வே மருத்துவமனையில் காயம் பட்டு சிகிச்சை பெற்று வந்த பயணிகளை சந்தித்து பின் செய்தியாளிடம் பேசும் போது,” இந்த ரயில் விபத்தில் 9 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள் 6 பேர் காயமடைந்து இருக்கிறார்கள். இந்த ரயில் பயணிகள் மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு சார்பில் நானும் செய்ய தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார்.


- ஓணம் பண்டிகை எதிரொலி; திண்டுக்கல், நிலக்கோட்டையில் நேற்று ஒரே நாளில் 170 டன் பூக்கள் விற்பனை




தொடர்ந்து தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த ரயில்வேயின் பொது மேலாளர்..,”நேற்று அவர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் முடித்து நாகர்கோவிலில் இருந்து இன்று  அதிகாலை 4:30 மணி அளவில் ரயிலில் மதுரை ரயில் நிலையம் வந்தனர். இதனையடுத்து 1 கிலோமீட்டர் தொலைவில் இவரளது ரயில் நிறுத்தப்பட்டது. அதிகாலையில் டீ போடுவதற்காக கேஸ் பற்ற வைத்த போது அது வெடித்து இந்த விபத்து நிகழ்ந்து இருக்கிறது.


இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். அவர்களது உடல்கள் இன்றே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் அளிக்க முயற்சிகள் செய்து வருகிறோம். இறந்தவர்களின் உடல்கள் விமான மூலம் அவர்களின் சொந்த ஊரான லக்னோவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.






இந்த விபத்தை தொடர்பாக இந்திய தண்டை சட்டப்படியும், ரயில்வே துறையின் சட்டப்படியும்  விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த நிகழ்வு ஒரு மோசமான நிகழ்வு என்றும் இந்த நிகழ்விற்கு காரணமான தவறு விளைத்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் கூறினார்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Tourist Train Fire Accident : மதுரையில் சுற்றுலா ரயிலில் பயங்கர தீ விபத்து 9 பேர் உயிரிழப்பு ? காரணம் என்ன..? தீவிர விசாரணை..!


மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டடம் கட்டியதாக குற்றச்சாட்டு.. நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹாவுக்கு நோட்டீஸ்