இந்தியாவின் பண்பாடு, பாரம்பரியம் மிக்க வரலாற்று சிறப்புள்ள சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க இந்திய ரயில்வே பாரத் கவுரவ் என்ற ஆன்மிக சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது. அனுபவம் வாய்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம் அதிகளவு ஆன்மீக சுற்றுலா ரயில்களை இயக்கியுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான வருவாய் ரயில்வே நிர்வாகத்திற்கு கிடைத்துவருகிறது. பயணத்திற்கான இடம், சைவ உணவு, உள்ளூர் பேருந்து வசதி என பல்வேறு வசதிகளை பேக்கேஜிங் முறையில் செய்து கொடுக்கின்றனர்.
இப்படி தொடர்ந்து ஆன்மீக சுற்றுலா ரயில்கள் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டத்திற்கு மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், சிவகங்கை பிள்ளையார் பட்டி விநாயகர் கோயில் , இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் என மிக முக்கியமான இடங்களுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் லக்னோவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த சுற்றுலா ரயில் மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது பயணிகள் சிலர் சமைக்கும் போது மினி சிலிண்டெர் வெடித்து பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினர் தீயணைக்கும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர.
பெட்டியில் பயணம் செய்த 90 பேரில் 85க்கும் மேற்பட்டோட் தப்பி ஓட்டம். இருவர் பிடித்து போலீசார் விசாரணை முதல் கட்ட விசாரணையில் ரயிலில் சமையல் செய்தது தெரியவந்துள்ளது. தற்போது வரை 9 பேர் வரை உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. ரயில்வே அதிகாரிகள் ரயில்வே மருத்துவக் குழுவினர் தீயணைப்பு துறை ரயில்வே பாதுகாப்பு படையினர் வருவாய்த்துறையினர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மீட்பு பணியிலும் விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில்..,” லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் ஆன்மீக சுற்றுலா ரயிலில் வந்த ரயிலில் தேனீர் வைத்த போது கேஸ் சிலிண்டர் வெடித்து 9 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை அதில் பலியான முதியவர்கள் இருவர் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது தான் முழு விபரம் தெரியவரும்” என்றனர்.
மேலும் சுற்றுலா ரயில்கள் குறித்து தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் - ஆன்மீக சுற்றுலா ரயில் மூலம் ரயில்வே துறைக்கு இவ்வளவு கோடி வருமானமா..?
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தேனி : லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர் மூலம் மொத்தம் 135 மெகாவாட் மின்உற்பத்தி