கரூர் மாவட்டத்தை சேர்ந்த கார்வேந்தன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பாக கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் "வேளாளர்கள்' என ஒரு ஆய்வு புத்தக வெளியீட்டு விழாவை கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தோம். இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு மதுரை ஆதீனம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். இதற்காக காவல்துறையிடம் பாதுகாப்பு கோரி மனு அளிக்கப்பட்டது. ஆனால் அக்டோபர் 24 ஆம் தேதி காவல்துறையினர் புத்தக வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டனர். மேலும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு அனுமதிக்கக் கூடாது என ஈரோடைச் சேர்ந்த புதிய திராவிட கழகம் சார்பில் ஆட்சேபனை தெரிவித்து காவல் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தின் மீது விளக்கம் கேட்டு சமாதான கூட்டம் நடைபெற்றது.

 

கூட்டத்தின் முடிவில் புத்தக வெளியீட்டு விழாவிற்கு அனுமதியில்லை என காவல் துறை தெரிவித்தது. ஆகவே,  காவல்துறை அனுமதி மறுத்து பிறப்பித்த  உத்தரவை ரத்து செய்து, நவம்பர் 14ஆம் தேதி கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் "வேளாளர்கள்" என்ற ஆய்வு புத்தகத்தை வெளியிட அனுமதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, மனுதாரர் கரூர் நகர துணை காவல் கண்காணிப்பாளரிடம் புதிய மனுவை சமர்ப்பிக்கவும் அதன் பேரில் புத்தக வெளியீட்டு விழாவிற்கு அனுமதி வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

 








மதுரையில் மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

 

மதுரையில் 12 வயது மகளுக்கு பெற்ற தந்தையே பாலியல் வன்கொடுமை அளித்ததாக கடந்த 2015ஆம் ஆண்டு மேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.  இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையானது மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கானது நீதிபதி ராதிகா முன்பாக விசாரணைக்கு வந்த போது, குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்ட நிலையில் பெற்ற மகளுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த தந்தைக்கு  ஆயுள்தண்டனயும், 5000ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அதிரடியாக தீர்ப்பு அளித்தார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.