மநாதபுரத்தை சேர்ந்த மெஹ்ருன் நிஷா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.அதில், "எனது கணவர் ரிபாயுதீன் கடந்த 2013 ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு 2016ஆம் ஆண்டு முதல் இலங்கை சிறையில் உள்ளார். இலங்கை சிறையிலிருந்து இந்திய சிறைக்கு மாற்றுவது குறித்து இந்திய தூதரகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, எனது மனுவை பரிசீலனை செய்து, 7 வருடங்களாக இலங்கை சிறையில் உள்ள எனது கணவரை இந்திய சிறைக்கு  மாற்ற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என  கூறியிருந்தார்.









இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன்அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில், இது தொடர்பாக இலங்கை அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், இலங்கை அரசின் பதிலுக்காக காத்திருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.







 



மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு என்ற பெயரில் அமைப்புகள் நடத்துவோர் மற்றும் தனி நபர்களின் சட்டவிரோத நடவடிக்கை மற்றும் கட்ட பஞ்சாயத்து நடவடிக்கைகளை தடை செய்யவும், சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

 

இது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறை டிஜிபி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட அமைப்பிடம் முறையிடலாம் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது மதுரைக்கிளை.மதுரை, தாசில்தார் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுந்தரராஜன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்,"மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் என்ற பெயர்களில் பலர்  அரசின் அமைப்பை போல செயல்படு கின்றனர். தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வகையில் டிஜிட்டல் மற்றும் பிளக்ஸ் பேனர்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.  டோல்கேட் மற்றும் பார்க்கிங் இடங்களில் கட்டணம் செலுத்த மறுக்கின்றனர். அரசு அதிகாரிகளை மிரட்டுகின்றனர்.

 

பல இடங்களில் கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். எனவே, மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு என்ற பெயரில் அமைப்புகள் நடத்துவோர் மற்றும் தனி நபர்களின் சட்டவிரோத நடவடிக்கை மற்றும் கட்ட பஞ்சாயத்து நடவடிக்கைகளை தடை செய்யவும், சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வு, ‘‘இது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் டிஜிபி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.எனவே உரிய அமைப்பிடம் முறையிடலாம்" எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.