தென்மாவட்டங்களில் மதுரை முக்கிய நகராக விளங்குறது. இதனால் மதுரை மேம்படுத்த ஸ்மார் சிட்டி உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரையின் மையமாக பாயும் வைகை நதி, சீர் செய்யப்பட வேண்டிய பணிகளில் முக்கியமானது என்பதால் அதில் மதுரை மாநகராட்சி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் அதனை நிறைவேற்றுவது சவாலாக உள்ளது.
இந்நிலையில் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார கேடுகளை விளைவிக்கும் வகையில் சட்ட விரோதமாக செயல்படும் இறைச்சிக் கடை, மீன்கடை உள்ளிட்டவற்றிற்கு அபராதம் விதிப்பது மற்றும் வளர்ப்பு பிராணிகளுக்கு உரிமம், மற்றும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள், குதிரைகள் அபராதம் விதிப்பது தொடர்பாக மதுரை மாநகராட்சியால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இனி வீடுகளில் நாய், மாடு, எருமை, குதிரை வளர்த்தால் மாநகராட்சியில் ஆண்டுக்கு 10 ரூபாய் பதிவுக்கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன் படி, அனுமதிக்கப்படாத இடங்களில் விற்பனைக்காக ஆடு, மாடு வதை செய்தால் 5000 ரூபாய் அபராதமும், தெருக்களில் சுகாதார கேடு விளைவிக்கும் வகையில் ஆடு, மாடு, குதிரை ஆகியவற்றை கண்டுகொள்ளாமல் விடும் உரிமையாளர்க்கு 1000ரூபாய் அபராதமும், தெருக்களில் அச்சுறுத்தும் மற்றும் சுகாதாரசீர் கேடு விளைவிக்கும் வகையில் நாய்களை விட்டால் 500ரூபாய் அபராதம், திடக்கழிவுகளை தெருக்களில் கொட்டும் இறைச்சி கடைகளுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம் தொடர்பாக 15 நாட்களுக்கும் பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக தங்களுடைய கருத்துக்களை மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
இது குறித்து பேசிய மதுரை சமூக ஆர்வலர் ஹக்கிம்" மாநகராட்சியின் இந்த திட்டத்தால் கடைக்காரர்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நடைமுறை சாத்தியத்திற்கு ஏற்ப திட்டங்களை சரி செய்ய வேண்டும். அதே போல் கால்நடைகளுக்கு வரி வசூல் செய்யும் மாநகராட்சி தெரு நாய்களுக்கு பொறுப்பேற்குமா ?. மதுரை மாநகருக்குள் சுற்றும் தெரு நாய்களால் அதிகளவு விபத்து ஏற்படுகிறது. அதன் விபத்து குறித்து அரசு ராசாசி மருத்துவமனையில் ஆய்வு செய்தால் தெரியவரும். எனவே மாநகராட்சி நிர்வாகம் இது போன்ற விசயங்களை சரி செய்யும் என்பதில் கேள்வி எழுகிறது" என தெரிவித்தார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ‛எங்களுக்கே ‛டப்’ கொடுக்குறீயே... யாருய்யா நீ...’ போலி ‛கமிஷனர்’ விஜயனிடம் 24 மணி நேர விசாரணை!