மதுரையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் நடைபெற்ற வந்த வருமானவரித்துறை சோதனை நிறைவு, முக்கிய ஆவணங்கள் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.







பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தங்கமகன், வெள்ளைக்காரதுரை, மருது, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் தயாரித்திருக்கிறார். மதுரை காமராஜர் சாலையில் உள்ள அன்பு செழியன் இல்லத்திலும் மேலமாசி வீதியில் உள்ள அவருக்கு சொந்தமான அலுவலகம், கீறைத்துறை பகுதியில் உள்ள வீடு, செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் திரையரங்கம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று முடிந்துள்ளது.




 

திரைப்பட சினிமா பைனான்சியர் அன்புச் செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி வருமானவரித்துறை சோதனை துவங்கியது. பிகில் பட வருவாயில் வரி ஏய்ப்பு செய்ததன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியது. இதில் சென்னையில் 10 இடத்திலும் மதுரையில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள  அன்பு செழியன் வீடு, தம்பி அழகர்சாமி வீடு, கோபுரம்  திரையரங்கம், கோபுரம் பைனான்ஸ் அலுவலகம் கோபுரம் ரெசிடன்சி என 20 மேற்பட்ட இடங்களில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். மூன்றாம் நாளாக இன்றும் தொடர்ந்த சோதனை மாலை நிறைவு அடைந்தது. 

 


 





இதில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் இருந்து வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக முக்கிய ஆவணங்கள் மற்றும்  கணக்கில் காடாத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை  விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண