மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஜனநாயக நெறிகளுக்கு முரணானது. கண்டனத்திற்குரியது. மாண்புமிகு உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தலையிட்டு சுற்றறிக்கையை வாபஸ் பெறச்செய்யுமாறு கோருகிறேன் ” - மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ட்வீட் செய்துள்ளார்.








 


மதுரை காமராசர் பல்கலைகழக நிர்வாகம் சார்பாக அறிக்கை ஒன்றை பல்கலைகழக நிர்வாகம் சார்பாக பதிவாளார் வெளியிட்டுள்ளார். அதில் ” பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட மாணவர்கள், ஊழியர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட யாரும் செய்தியாளர்கள் மற்றும் மீடியாக்களை அணுகக்கூடாது. அவ்வாறு தகவலை பகிர வேண்டும் என்றால் பல்கலைகழக பதிவாளரிடம் முறையான அனுமதி பெற்ற பின்புதான் தகவல் தெரிவிக்க வேண்டும். அதற்கு குறைந்தபட்சம் 2 வாரத்திற்கு முன்பே அனுமதி பெற வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை எம்.பி இந்த சுற்றறிக்கைக்கு கண்டிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார். அதனை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களுக்கும் கொண்டு சென்றுள்ளார். இந்த பதிவால் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






 




இந்நிலையில் இந்த தகவலை பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவர்கள்,பி.ஹச்.டி மாணவர்கள் பதிவாளர் அனுமதி இல்லாமல் செய்தியாளர்களை சந்திக்கவோ பத்திரிக்கைக்கு அறிக்கை அளிக்கவோ கூடாது என சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் . ” - Crime : லாட்டரி சீட்டில் நஷ்டம்.. கற்றுக்கொள்ள Friends of Police.. கொள்ளையன் வேலூர் மணிகண்டன் சிக்கியது எப்படி ?