மதுரையில் இருந்து பழனி தைப்பூசத்திற்கு கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தைப்பூச திருவிழா 2025

Thaipusam 2025: தமிழ்கடவுள் என்று தமிழர்களால் கொண்டாடப்பட்டு போற்றி வணங்கப்படும் கடவுள் முருகப்பெருமான். முருகனுக்கு மிகவும் உகந்த நாட்களில் ஒன்றாக தைப்பூசம் திகழ்கிறது. நடப்பாண்டிற்கான தைப்பூசம் நாளை கொண்டாடப்படுகிறது. கடந்த 5ம் தேதியே தைப்பூசத் திருவிழா காெடியேற்றப்பட்டு தொடங்கிவிட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள முருகப்பெருமான் கோயில்கள் களைகட்டி காணப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் இருந்து சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து பழனி தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தைப்பூச திருவிழா சிறப்பு ரயில்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் பிப்ரவரி 11 நாளை தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக பயணிகளின் வசதிக்கு மதுரை - பழனி இடையே பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி  மதுரை - பழனி தைப்பூச சிறப்பு ரயில் (06722) குறிப்பிட்ட இரு நாட்களிலும் மதுரையிலிருந்து காலை 08.45 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு பழனி சென்று சேரும். மறு மார்க்கத்தில் பழனி - மதுரை தைப்பூச சிறப்பு ரயில் (06721) பழனியில் இருந்து மாலை 03.00 மணிக்கு புறப்பட்டு இரவு 05.45 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த சிறப்பு ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.