தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலக தெருவில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது . இந்தப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தன்னுடைய பள்ளி ஆசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது உறவினர்களுடன் சென்று பள்ளி நிர்வாகத்திடம் பள்ளி ஆசிரியர் மாணவியிடம் தகாத முறையில் நடந்தது தொடர்பாக புகார் தெரிவித்து உறவினர்களுடன் முற்றுகையிட்டனர்.


5 மடங்கு பெரியதாகும் சென்னை... விரிவாக்கத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதல்




இது சம்பந்தப்பட்டு மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து தெற்கு காவல் நிலைய போலீசார் பள்ளி வளாகத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கூறுகையில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்னும் ஆசிரியர் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் , அவர் மேல் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.


பெண் காவலருடன் நெருக்கம்.....டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடி மாற்றம்


மேலும் ஏற்கனவே அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்ததால் பள்ளி நிர்வாகம் அவரை பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்துள்ளதும், மீண்டும் அவர் வேறு ஒரு பள்ளிக்கு சேர்ந்து, பணியில் சேர்ந்த மூன்றாவது நாளே அந்தப் பள்ளியில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டுள்ளார். பணியில் இருந்து நீக்கப்பட்ட அந்த ஆசிரியர் கம்பம் வனத்துறை அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள உள்ள அதே பள்ளியில் மீண்டும் பணிக்கு சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார் எனவும்,


Sivakarthikeyan: அடுத்தடுத்து வெளியான பிரின்ஸ் பட அப்டேட்...! குஷியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்


பள்ளி கட்டிட வளாகத்தில் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் இல்லை எனவும் , அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. தற்போது மீண்டும் பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடக்க முற்பட்டுள்ளார். தொடர்ந்து இந்த பள்ளி மீது பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து பாலியல் புகார் சுமத்தப்பட்ட ஆசிரியர் ராஜேஸ் கண்ணனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண