வனபாதுகாப்பு பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலை வாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்றுவிட்டு, பின் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என அறிவுரை வழங்கியது.
தேனி : “ அதிமுகவை ஒற்றத்தலைமையாக ஏற்க வாருங்கள்" ஓபிஎஸ் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
மது பாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதால் விலங்குகள் பாதிக்கப்படுவதை தடுக்க இதுசம்பந்தமாக திட்டம் வகுக்க வேண்டும் எனவும் தவறினால் மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என நீதிமன்றம் எச்சரித்திருந்தது. இந்நிலையில், மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் , வெளி நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இங்கு கோக்கர்ஸ் வாக், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல் ஏரி, தற்கொலை முனை, செண்பகனூர் அருங்காட்சியம், கொடைக்கானல் அறிவியல் வானாய்வகம், தூண் பாறைகள், குணா குகைகள், வெள்ளி நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ் பாறை, குறிஞ்சி ஆண்டவர் கோயில், பேரிஜம் ஏரி போன்ற பல சுற்றுலாத் தலங்கள் கொடைக்கானலின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளன.
'திமுகவின் உண்மை முகத்தை வெளிப்படுத்திய முரசொலி' - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காலி மது பாட்டில்களை வன பகுதிகளில் வீசுவதால் சுற்று சூழல் பாதிக்கபடுவதுடன் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்கும் வகையில் கொடைக்கானலில் உள்ள டாஸ்மாக்குகளில் விற்கப்படும் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் அதனை திருப்பி கொடுத்த பின் 10 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.
Hyderabad Police attack Youth : மதுபோதையில் அட்டகாசம்.. லத்தியால் பாடமெடுத்த போலீஸ்.. வைரல் வீடியோ..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்