Madurai Metro: மதுரைக்கும் வரப்போகுது மெட்ரோ ரயில்..! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு..!

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

Continues below advertisement

தமிழ்நாட்டின் மக்கள்தொகை அதிகமுள்ள நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு மெட்ரோ ரயில் சேவைகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டுமே தற்போது மெட்ரோ சேவைகள் இயங்கி வருகிறது.

Continues below advertisement

மதுரையில் மெட்ரோ:

இந்த நிலையில், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இ – டெண்டர் கோரப்பட்டுள்ளது. ரூபாய் 3 கோடியில் 150 நாட்களுக்குள் விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து தாக்கல் செய்ய வேண்டும் என்று ஒப்பந்த்தில் கோரப்பட்டுள்ளது

ரூபாய் 8 ஆயிரம் கோடியில் மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவையிலும் மெட்ரோ ரயிலை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola