நடிகர் விஜய் தனது கட்சியின் பெயராக ”தமிழக வெற்றி கழகம்” என்ற பெயர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பழனியில் விஜய் ரசிகர் மன்றத்தினர் பட்டாசுகள் வெடித்தும் , இனிப்புகள் வழங்கியும், வேட்டி சேலை வழங்கியும் கொண்டாடினர்.
தொடரும் சனாதன சர்ச்சை.. அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கடி.. கர்நாடக நீதிமன்றம் அதிரடி!
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் (Tamizhaga Vetri Kazhagam) கட்சியைத் தொடங்கி உள்ளது, அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. புலி வருது புலி வருது கதையாக அல்லாமல், கட்சியின் பெயரை அறிவித்துவிட்டார் நடிகர் விஜய்.
Tamizhaga Vetri Kazhagam: இன்னும் ஒரே ஒரு படம்தான்! சினிமாவில் இருந்து விலகும் நடிகர் விஜய்!
முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விஜய் கட்சியின் சார்பில் நேற்று விண்ணப்பம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சினிமாவில் இருந்து விலகுவதாகவும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். இதனை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் பல்வேறு பகுதிகளில் இதுவரையில் விஜயின் மக்கள் இயக்கம் சார்பில், பல்வேறு மக்கள் சேவை பணிகள் செய்யப்பட்டு வந்தது. இதனால் அவர் கட்சி தொடங்க முடிவெடுத்திருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், விஜய் தனது கட்சி பெயரை அறிவிப்பார் என பரபரப்பான செய்திகள் வெளியாகி வந்தன.
Vijay Political Party: அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்! எப்போது போட்டி?
இந்த நிலையில், நடிகர் விஜய் “தமிழக வெற்றிக் கழகம்” என தனது கட்சிப் பெயரை அதிரடியாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து விஜயின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அதன்படி பழனியில் விஜய் ரசிகர்கள் பஸ் நிலைய ரவுண்டான பகுதியில் பட்டாசு வெடித்து மக்களுக்கு இனிப்பு வழங்கினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவச வேட்டி-சேலைகளை வழங்கி தனது முதற்கட்ட பணியை தொடங்கினர். இது பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.