நடிகர் சந்தானம் நடிப்பில் நேற்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ள வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வெற்றி பெற வேண்டி திண்டுக்கலில் சந்தானம் ரசிகர் மன்றம் சார்பில் சாமி வேடம் அணிந்து மண்பானையுடன் நூதன வழிபாடு செய்தனர்.


தொடரும் சனாதன சர்ச்சை.. அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கடி.. கர்நாடக நீதிமன்றம் அதிரடி!




வடக்குப்பட்டி ராமசாமி:


திரைப்பட இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி என்ற திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இயக்குநர் கார்த்திக் யோகி சந்தானத்தை வைத்து "டிக்கிலோனா" என்ற படத்தின் மூலம் நகைச்சுவை ட்ரீட் கொடுத்திருந்தார். இதையடுத்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தினை கொடுத்துள்ளது. இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.


Tamizhaga Vetri Kazhagam: இன்னும் ஒரே ஒரு படம்தான்! சினிமாவில் இருந்து விலகும் நடிகர் விஜய்!




சந்தானம் கதாநாயகனாக நடிக்க முடிவெடுத்ததில் இருந்து காமெடி ட்ராக்கில் மிகவும் உறுதியாக இருக்கின்றார் என்பதற்கு வடக்குப்பட்டி ராமசாமி மற்றொரு உதாரணம். படத்தின் ட்ரைலெர் வெளியானபோது ஏற்பட்ட விவாதம் படத்தின் மீதான கவனத்தை கொஞ்சம் ஈர்த்திருந்தாலும், ட்ரெய்லரால் ஏற்பட்ட விவாதத்திற்கும் இந்தப் படத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகின்றது. படம் முழுக்க காமெடி காட்சிகளாலும் காமெடி வசனங்களாலும் ரசிகர்களை சிரிக்க வைக்க படக்குழு எடுத்த முயற்சிகள் பல இடத்தில் வெற்றி கண்டுள்ளது. 


Vijay Political Party: அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்! எப்போது போட்டி?




நூதன வழிபாடு:


அந்த வகையில் திண்டுக்கல்லில் ஐந்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டி திண்டுக்கல் மாவட்ட சந்தானம் ரசிகர் மன்றம்  சார்பில் மாவட்டத் தலைவர் ஹேமநாதன் தலைமையில் மண் பானையுடன் சாமி வேடம் அணிந்த குழந்தைகள் கலந்து கொண்ட நூதன வழிபாடு நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இந்து மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் தர்மா, பாரதிய ஜனதா கட்சியும் ஒன்றிய செயலாளர் துரைப்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.  முருகன் மற்றும் கண்ணாத்தாள் சுவாமிகளில் வேடமடைந்த குழந்தைகள் மண்பானையுடன் மேட்டு ராஜக்காபட்டி முருகன் கோவில் சிறப்பு வழிபாடு நடத்தினர் அதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக ஆர்த்தி கிராண்ட் திரையரங்குக்கு சென்று ரசிகர்கள் திரைப்படத்தை கண்டு களித்தனர்.