தமிழகத்திற்கு எதுவும் செய்யாமல் அண்ணாமலை வாய்கிழிய பேசினால் மக்கள் ஏமாந்து போய் விடுவார்களா?

 

முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்...” அண்ணாமலைக்கு அசைன்மென்ட் கொடுப்பது அமித்ஷாவாக இருக்கட்டும். ஆனால் அ.தி.மு.க.,வின் 2 கோடி தொண்டர்களுக்கு எங்கள் எடப்பாடியார் கொடுத்துள்ளார். அது, ”அ.தி.மு.கவை மீண்டும் ஆட்சி கட்டில் அம்மா ஆட்சியை மலர செய்ய வேண்டும், மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வேண்டும்”  என்ற அசைமென்ட். உங்கள் அசைன்மென்ட் என்னவாகும் என்பது ஆண்டவனுக்குத் தான் தெரியும். ஆனால் அ.தி.மு.க தொண்டர்கள் இதயத்தில் சுமந்து கொண்டுள்ள அசைன்மென்ட் அது எட்டு கோடி தமிழர்களுக்கும் உள்ள அசைன்மென்ட் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கட்டில் அமைகின்ற அசைன்மென்ட் சத்துணவு திட்டத்தை கொடுத்த தலைவர்  என்று கேட்டால் பிறந்த குழந்தை சொல்லும்  சரித்திர நாயகன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என்று.

 

அதிமுகவைப் பற்றி பேச யார் அதிகாரம் கொடுத்தா

 

ஆட்சியைபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் யாருக்கு எந்த வருத்தம் இல்லை, கட்சியை தொடங்கியவர்கள் யார் வேண்டுமானாலும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று சொல்வார்கள் அதைப்பற்றி கவலையில்லை. செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சிக் கூட்டத்தில் அதிமுகவைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. வரலாறு தெரியாதவர்கள் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள் உண்மையான அதிமுக தொண்டனின் நெஞ்சில் முள் பாய்ந்ததை போல் உள்ளது. செயல்வீரர் கூட்டத்தில் பேசும்போது உங்கள் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்றால் கட்சி திட்டத்தைப் பற்றி பேசுங்கள். உண்மையான தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றால் மாநிலத் தலைவர் அண்ணாமலை என்ன செய்திருக்க வேண்டும், இன்றைக்கு தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது பீகாருக்கும், ஆந்திராவிற்கும் நிதி வாரி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு நிதி இல்லை. ஆகவே ப.ஜ.க.,வில் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்ய முடியும் ஆகவே என் பதவியை ராஜினாமா செய்கிறேன். அண்ணாமலை சொல்லி இருந்தால், தமிழ்நாட்டு மக்களை நேசிக்கிறார் என்று இந்த கூட்டத்தில் ஏற்றுக்கொள்கிறோம்.

 

அண்ணாமலை திருத்திக் கொள்ள வேண்டும்

 

எந்த மண்ணாங்கட்டியும் செய்யவில்லை. வாய் கிழிய பேசினால் தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்து விடுவார்களா அதிமுகவை பற்றி பேசுவதற்கு என்ன யோக்கிதை உள்ளது? என்ன தகுதி உள்ளது, எதற்காக நீங்கள் பேசுகிறீர்கள். இப்போது சொல்கிறேன் அண்ணாமலை அவர்களே மீண்டும் புரட்சித் தமிழர் எடப்பாடியார் தலைமையில் எட்டு கோடி மக்களின் ஆதரவோடு அதிமுக ஆட்சி ஆட்சி மலரும். அண்ணாமலை வரலாற்றை பார்த்துவிட்டு இது போன்ற வார்த்தைகளை திருத்திக் கொள்ள வேண்டும். எங்களை பலவீனப்படுத்த உங்களுக்கு என்ன அசைன்மென்ட் என்று தெரியவில்லை? இன்றைக்கு திமுக ஆட்சியில் கள்ளச்சாராயத்தால் 69 இறந்து போய் உள்ளனர். இன்னும் எத்தனை பேர் இறந்துள்ளனர், என்று தெரியவில்லை? அதிமுகவுடன் பயணித்தீர்கள் திடீரென வேறுபட்டு இருக்கிறீர்கள். இதைப் பற்றி யாரும் வருத்தப்படவில்லை. அதிமுக என்பது நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல, உங்களைப் போன்ற தலைவர்கள் அல்ல. எடப்பாடியார் 50 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர். இன்றைக்கு இயக்கத்தை எதிரிகளிடமிருந்து, துரோகிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக தன்னை அர்ப்பணித்து உழைத்தவர். 

 

பதவியில் இருந்து நீக்க வேண்டும்

 

தா.மோ.அன்பரசன் அமைச்சர் பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர் அம்மாவைப் பற்றிய பேசியதற்கு மு.க.ஸ்டாலின் எந்த கண்டனம் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே அப்போது கருணாநிதியை கருவில் குற்றம் என்று கூறினார்கள் ஆனால் இன்றைக்கு அவர் மட்டுமல்ல ஸ்டாலினும், உதயநிதியும் ஆகியோர் கருவின் குற்றமே ஆகும்.  அம்மாவை நாலாம்தரமாக அன்பரசன் பேசியுள்ளார். உண்மையான சபை நாகரிகம், அரசியல் நாகரிகம், அரசியல் பண்பாட்டை தமிழர் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கிற தலைவராக ஸ்டாலின் இருப்பேரானால் உடனடியாக அமைச்சர் பதவியில் தா.மோ. அன்பரசனை இருந்து நீக்க வேண்டும், என்று இந்த கூட்டத்தில் வாயிலாக கண்டனம் தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றுகிறேன்” என பேசினார்.