கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியின் போது அடிமாலி அருகே 14வது மைலில் மண் சரிவு ஏற்பட்டு தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். மண்ணில் சிக்கிய தொழிலாளர்களை அப்பகுதி மக்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் மீட்டனர். தேசிய நெடுஞ்சாலையை அறிவியல் பூர்வமாக அமைக்காததால், தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.




கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கேரள - கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வளராக் மற்றும் அடிமாலி இடையே 14வது மைலில் தேசிய நெடுஞ்சாலை சார்பாக சாலை ஓரத்தில் மண் சரிவு ஏற்படாமல் இருக்க பணியாளர்களைக் கொண்டு சாலை மற்றும் மலையோர பகுதிகளை பலப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று காலை பணியின்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் தடுப்பு சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மூன்று பேர் மண்ணிற்குள் சிக்கினர்.  இந்த விபத்தில்  இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்தனர். இந்த விபத்தில் தமிழகத்தின் தென்காசியைச் சேர்ந்த காளிசாமி, மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஜோஸ் ஆகியோர் மண்ணில் புதையுண்டனர்.


Parliament Session: 18ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம்.. ஜூன் 24ஆம் தேதி கூடுகிறது!




Mohan : தோழிகள் ஷோபா, சில்க் ஸ்மிதா பற்றி மோகன் சொன்ன முக்கியமான விஷயம் இதுதான்..


தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் மண்ணில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் உள்ளூர்வாசிகள் மற்றும் பிற தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்த மீட்பு பணிக்கு தீயணைப்பு மற்றும் போலீசார் வருவதற்கு முன், மண்ணில் சிக்கிய டோலிலா என்பவர் வெளியே மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட  அவர்கள் அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையை முறையாக அமைக்காததால், அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மலைப்பாங்கான சாலை என்பதால், மழைக் காலங்களில் இப்பகுதியில் அவ்வப்போது நிலச்சரிவும்,  ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.