Train No.06051/06052 Tambaram - Ramanathapuram - Tambaram Bi-Weekly Express Specials:

 

சிறப்பு ரயில்கள்

 

சிறப்பு தினம் என்றாலே வெளியூரில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு தயாராகி விடுவார்கள். அதன் காரணமாக, சிறப்பு தினங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள், வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இதன் காரணமாக பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றே சொல்லலாம். இதன் காரணமாக, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கூடுதல் பேருந்துகளை இயக்க, தமிழ்நாடு அரசு முடிவு செய்துவருகிறது. ரயில்களில் தொடர்ந்து விடுமுறை நாட்களிலேயே கூட்டம் அதிகளவும் ஏற்படும். இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் தாம்பரம் - ராமநாதபுரம் வார விடுமுறை சிறப்பு ரயில்கள் குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர் அதனை முழுமையாக பார்க்கலாம்.

 

தாம்பரம் - ராமநாதபுரம்

 

வார இறுதி  விடுமுறை காலக் கூட்ட கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் - ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் (06051) ஜூன் 21, 23, 28, 30, ஜூலை 5, 7, 12, 14, 19, 21, 26, 28 ஆகிய வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.50 மணிக்கு ராமநாதபுரம் வந்து சேரும்.

 


 

ராமநாதபுரம் - தாம்பரம்

 

மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் - தாம்பரம் சிறப்பு ரயில் (06052) ஜூன் 22, 24 29 ஜூலை 01, 06, 08, 13, 15, 20, 22, 27, 29 ஆகிய சனி மற்றும் திங்கட்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து மாலை 03.00 மணிக்கு புறப்பட்டு  அதிகாலை 03.15 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.  இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, கல்லல், மானாமதுரை, பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று  செல்லும்.

 

பயணச்சீட்டு முன்பதிவு துவக்கம்

 

இந்த சிறப்பு ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகளுடன் கூடிய ரயில் மேலாளர்  பெட்டி இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு விரைவில் துவங்கும்.