பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய திருமங்கலம் ஆட்டுச்சந்தை - 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை.
பக்ரீத் பண்டிகை 2024
உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத்துக்கு தனி இடம் உண்டு. இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் 12-வது மாதமான துல் ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு வரும் 17-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு திருமங்கலம் கால்நடை சந்தையில் 3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது.
திருமங்கலம் ஆட்டுச்சந்தை
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். தென் மாவட்ட அளவில் புகழ் பெற்ற இந்த ஆட்டுச்சந்தையில் தீபாவளி, பொங்கல் மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அதிக எண்ணிக்கையில் ஆடுகள் விற்பனைக்கு வரும். வரும் 17-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரை திருமங்கலம் ஆட்டுச்சந்தை பக்ரீத் ஸ்பெஷல் சந்தையாக நடந்தது. ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. தமிழகம் தவிர ஆந்திரா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகளை விற்பனைக்கு வியாபாரிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
அதுமட்டுமின்றி திருமங்கலம், மதுரை, விருதுநகர், தேனி, கம்பம், வாடிப்பட்டி என தென் மாவட்டத்தினர் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் ஆடுகளை வாங்க குவிந்துள்ளனர். அதிகாலை காலை 4 மணி முதலே ஆட்டுச்சந்தை விற்பனை களைகட்டியது. இங்கு 10 ஆயிரம் ஆடுகள் முதல் 20 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனை செய்யப்பட்டன. பக்ரீத் முன்னிட்டு 4 மணி நேரத்தில் தற்போது வரை ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
ஆடு விற்பனை ஜரூர்
மேலும் இது குறித்து மேலூர் பகுதி வாடிக்கையாளர் முத்துக் குமார் நம்மிடம் பேசுகையில்...,” 40 கிலோ மீட்டர் கடந்து திருமங்கலம் ஆட்டுச் சந்தைக்கு ஆடு வாங்க வந்தோம். பக்ரீத் பண்டிகை என்பதால் விலைவாசி அதிகமாக தான் இருந்தது. இருந்த போதிலும் பக்ரீத்திற்கு ஆடு உரிக்க வேண்டும் என்பதால் கூடுதல் விலை கொடுத்து ஆடுகளை வாங்கினோம். திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் சிறந்த ஆடுகள் கிடைக்கும். இந்த பகுதியில் கிடைக்கும் ஆடுகளுக்கு எப்போது கிராக்கி இருக்கும். அதனால் பக்கத்து மாவட்ட வாடிக்கையாளர்களும் இங்கு வந்து ஆடுகள் வாங்கிச் செல்கின்றனர். இருந்த போதிலும் ஆடுகள் வாங்குவதில் கவனம் இருக்க வேண்டும். அதன் கால்கள், முடி, பல், காது உள்ளிட்டவற்றையும் வயிற்கு பகுதியையும் தொட்டுப் பார்த்து தான் வாங்குவோம் என்று தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Bakrid 2024 : களைகட்டும் பக்ரீத் பண்டிகை ஏற்பாடுகள்.. திருப்புவன சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஜோர்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Aishwarya Arjun - Umapathy: மூணு முடிச்சு போட்டாச்சு.. நடந்து முடிந்த ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி திருமணம்!