உச்சக்கட்ட போதையில் கழிவுநீர் கால்வாயில் ஹாயாக படுத்துறங்கிய ஆட்டோ ஓட்டுனர். சடலம் என நினைத்து மீட்க சென்ற தீயணைப்புத்துறையினர். ஸ்பைடர்மேன் ரேஞ்சுக்கு போராடி மீட்டெடுத்து கூல்ட்ரிங்ஸ் கொடுத்து குளிக்க வைத்த தீயணைப்புத்துறையினர்.


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை


மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அவர்களுடன் உறவினர்களும் வந்து செல்வதால் அப்பகுதி எப்போதும் பிசியாக இருக்கும். மதுரை மட்டுமில்லாது சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என்று தென்மாவட்ட மக்கள் மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு ராஜாஜி மருந்துவமனையை நம்பியுள்ளனர்.


இதனால் சேர் ஆட்டோ, பைக், கார் என அப்பகுதியும் இரவு, பகலாக மருத்துவமனை சாலையில் கடப்பது சிரமாக இருக்கும். மருத்துவமனை அருகிலயே ஒயின்ஷாப்களும் இருப்பதால் மதுப் பிரியர்கள் அதிகளவு மது அருந்திவிட்டு சாலைகளிலயே போக்குவரத்துக்கு இடையூறாக படுத்துக்கொள்வது, அங்கும் இங்கும் சுற்றுவது என பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது என அட்ராசிட்டியில் ஈடுபடுகின்றனர்.


இந்நிலையில் ஒருவர் அதிக மதுபோதை காரணமாக மருத்துவமனை எதிரேயுள்ள கழிவுநீர் கலந்த கால்வாய்க்குள் விழுந்துள்ளார். இதனை யாரும் கண்டுகொள்ளாத நிலையில்  கால்வாய்க்குள் இருந்த கழிவுநீரிலும் குப்பையோடு்  படுத்துக்கிடந்துள்ளார். 


- AI in IIT Madras: ஐஐடி சென்னையில் AI படிக்க ஆசையா? இந்த ஆண்டிலேயே சேரலாம்: எப்படி?- முழு விவரம்


மதுப் பிரியரை மீட்ட தீயணைப்புத்துறையினர்


இதனிடையே அந்த வழியாக சென்ற பொதுமக்கள் திடிரென கால்வாய்க்குள் சடலம் போல கிடப்பதை பார்த்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சடலம் என நினைத்து எட்டிப்பார்த்த போது, கால்வாய்க்குள் முனகல் சப்தம் கேட்டுள்ளது. 


இதனையடுத்து அவசர, அவசரமாக கழிவுநீராக இருந்த கால்வாய்க்குள் இறங்கிய தீயணைப்புத்துறையினர், உள்ளே கிடந்த நபரை மீட்டபோது மதுபோதையில் படுத்துகிடந்தது தெரியவந்துள்ளது. அப்போது மதுபோதையில் கிடந்த அந்த நபரை மீட்ட பின் அவருக்கு கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி கொடுத்து, களைப்பை போக்கினர்.


அந்த நபரை விசாரித்தபோது மதுரை மாவட்டம் இளமனூர்  பகுதியை சேர்ந்த பாக்யராஜ் என்ற ஆட்டோ ஓட்டுனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை தண்ணீரை ஊற்றி குளிக்கவைத்து போதையை இறக்கிவிட்டு பின்னர் அனுப்பிவைத்தனர்.


போதையில் சடலம்போல கழிவுநீரில் புரண்டு புதைந்து கிடந்த நபரை மீட்ட தீயணைப்புத்துறையினரை பொதுமக்கள் பாராட்டிசென்றனர்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Bakrid Goat Sale: பக்ரீத் பண்டிகை... களைகட்டிய திருமங்கலம் ஆட்டுச்சந்தை - ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Cabinet Portfolio: துணை முதலமைச்சரானார் பவன் கல்யாண்.. ஆந்திர அமைச்சரவை இலாக்காக்கள் அறிவிப்பு!