கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் - சென்னை மற்றும் தாம்பரம் இடையே சிறப்பு கட்டண சிறப்பு முன்பதிவு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வண்டி எண் 06005 சென்னை - நாகர்கோவில் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 23 அன்று மாலை 03.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.20 நாகர்கோவில் சென்று சேரும்.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
மறுமார்க்கத்தில் வண்டி எண் 06006 நாகர்கோவில் - சென்னை சிறப்பு கட்டண சிறப்பு ரயில் டிசம்பர் 24 அன்று மாலை 03.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு மற்றும் இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, மூன்று குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு இருக்கை மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில் - சென்னை சிறப்பு ரயில் மாம்பலம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - கீழடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு...!
நாகர்கோவில்- தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில் வண்டி எண் 06004 நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் டிசம்பர் 26 அன்று நாகர்கோவிலில் இருந்து இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06003 தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து டிசம்பர் 27 மாலை 04.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.20 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். இந்த ரயில்கள் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஐந்து குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு இருக்கை மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்களில் முன்பதிவு செய்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும் இந்த ரயில்களுக்கான முன்பதிவு நவம்பர் 28 காலை 08.00 மணிக்கு துவங்குகிறது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!