திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் கீழ்மலை கிராமமான பாச்ச‌லூர் ம‌லைக்கிராம‌த்தில் கடந்த வாரம் 15 ஆம் தேதி புத‌ன் கிழ‌மை ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப‌ள்ளி வ‌ளாக‌த்திலேயே 5ஆம் வகுப்பு சிறுமி உட‌ல் க‌ருகி உயிரிழ‌ந்த‌ ச‌ம்ப‌வ‌த்தினை க‌ண்டித்தும், காவல் துறையினர் கடந்த 6 நாட்களாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் எந்த‌வித‌மான‌ முன்னேற்ற‌ம் ஏற்ப‌டாத‌தை தொட‌ர்ந்து, கொடைக்கானல் மேல்மலைக்கிராமமான கூக்கால் ம‌லைக்கிராம‌ பொதும‌க்க‌ள் அந்த‌ப்ப‌குதியில் இய‌ங்கி வ‌ரும் கூக்கால் ந‌டுநிலை ப‌ள்ளிக்கு த‌ங்க‌ள் குழ‌ந்தைக‌ளை  அனுப்ப‌ மறுத்து வருகின்றனர்,




திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான பாச்சலூர் கிராமத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பாச்சலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சத்யராஜ் மற்றும் பிரியா ஆகியோரின் குழந்தைகளான தர்ஷினி, பிரித்திகா, பிவின்குமார் ஆகிய மூன்று குழந்தைகள் அந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். இன்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் பிரித்திகா வழக்கம்போல் உணவு இடைவேளையின்போது பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரவில்லை என பெற்றோர்கள் மூத்த மகளான தர்ஷினியிடம் கேட்டபோது தங்கை பிரித்திகா உணவு இடைவெளியில் இருந்தே காணவில்லை என்று கூறியுள்ளார். உடனே குழந்தையின் பெற்றோர் இருவரும் பள்ளிக்குச் சென்று பார்த்தபோது பள்ளி சமையலறை அருகே பிரித்திகா உடல் கருகிய நிலையில் கிடந்துள்ளார். உடனே பெற்றோர்கள் பிரித்திகாவை மீட்டு அருகில் இருந்த உறவினரின் வாகனத்தில் குழந்தையை எடுத்துக்கொண்டு ஒட்டன்சத்திரம் நோக்கி வந்தபோது ”அப்பா” என்று மட்டும் கூறிவிட்டு குழந்தை இறந்திருக்கிறது.




இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தையின் இறப்பு குறித்து போலிசார் கடந்த ஒரு வாரமாக விசாரணை செய்து வருகின்ற நிலையில், விசாரணையில் எந்த ஒரு தகவலும் முன்னேற்றமும் இல்லாததாக கூறப்படுகிறது. இந்தநிலையில்  ம‌லைக்கிராம‌ங்க‌ளில் உள்ள‌ அனைத்து ப‌ள்ளிக‌ளிலும் க‌ண்காணிப்பு கேம‌ரா பொருத்தவும், ப‌ள்ளிக்கு வ‌ரும் குழ‌ந்தைக‌ளின் பாதுகாப்பினை உறுதி செய்ய‌வேண்டும் உள்ளிட்ட‌ கோரிக்கைக‌ளை வ‌லியுறுத்தி ப‌தாகைக‌ளை ஏந்தியும், இது போன்ற ச‌ம்ப‌ங்க‌ள் அடுத்து ந‌டைபெற‌க்கூடாது என்ப‌தை வ‌லியுறுத்தியும் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கிடைக்க அடுத்த‌ க‌ட்ட‌மாக‌ உண்ணாவிர‌த‌ம் மேற்கொள்ள இருப்பதாக  தெரிவித்து  கூக்கால் கிராம‌ பொதும‌க்க‌ள் த‌ங்க‌ள‌து எதிர்ப்பினை ப‌திவு செய்தனர்,




இத‌னை அறிந்த  கூக்கால் ப‌ள்ளியில் ப‌ணி புரியும் ஆசிரிய‌ர்க‌ளும், கொடைக்கான‌ல் காவ‌ல்துறையின‌ரும்  பெற்றோர்களிட‌ம் ச‌மாதான‌ பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சமாதான பேச்சுவார்தையில் சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான குற்றவாளியை கண்டுபிடிக்கும் வரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். சமாதான பேச்சுவார்தையில்  உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து  அனைவரும் கலைந்து சென்றனர். இதனால்  கூக்கால் ம‌லைக்கிராம‌த்தில் பரபரப்பு நிலவியது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண