பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



 

தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள்

 

பொங்கல் பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06091) ஜனவரி 13, 20 மற்றும் 27  ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து மாலை 03.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை மதியம் 04.55 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.  மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06092) ஜனவரி 12, 19 மற்றும் 26 ஆகிய நாட்களில்  திருநெல்வேலியில் இருந்து மாலை 03.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். 

 

எந்த இடங்கள் வழியாக கடந்து செல்லும் ?

 

இந்த ரயில்  செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை,  விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், கடையநல்லூர்,  தென்காசி, பாவூர்சத்திரம், கீழ கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.  இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி  பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம்  வகுப்பு பொதுப்பெட்டிகள்,   2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.

 


 

 தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில்

 

ராமநாதபுரம் - தாம்பரம் சிறப்பு ரயில் (06104) ஜனவரி 10, 12 மற்றும் 17 ஆகிய நாட்களில்  ராமநாதபுரத்தில் இருந்து மாலை 03.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். 

மறு மார்க்கத்தில் தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் (06103) ஜனவரி 11, 13 மற்றும் 18  ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து மாலை 05.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை மதியம் 05.15 மணிக்கு ராமநாதபுரம் சென்று சேரும். 

 

எந்த வழியாக கடந்து செல்லும் ?

 

இந்த ரயில்  செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, பேரளம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.  இந்த ரயில்களில்  10 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள்,  ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி) காலை 8 மணிக்கு துவங்குகிறது.