மதுரை மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 04-01-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

 

மின் பாதையில் பராமரிப்பு பணிகள்  

 

தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும்.  இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது,  சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம்  மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் மின் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மின் வாரிய மதுரை திருமங்கலம் செயற்பொறியாளர் பி.முத்தரசு குறிப்பிட்டுள்ளபடி நாளை மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகளை பார்க்கலாம்.

 


 

மின் தடை ஏற்படும் பகுதிகள் (4.1.2025)

 

கப்பலூர், கருவேலம்பட்டி, சம்பகுளம், பரம்புபட்டி, சிட்கோ, மெப்கோ, கப்பலூர் பகுதி தியாகராஜர் மில், J.S. அவின்யூ, புளியங்குளம், சொக்கநாதன்பட்டி தர்மத்துப்பட்டி, உச்சப்பட்டி, TNHB, தனக்கன்குளம், நிலையூர், கைத்தறிநகர், ஹார்விபட்டி, PRC காலனி, மகளிர் தொழிற்பேட்டை, தொழிற்பேட்டை, Hi-tech Auto mobile, வேடர்புளியங்குளம், டெக்ஸ்டைல், HPL, கப்பலூர் ஹவுசிங் போர்டு, கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், SR V நகர், இந்திரா நகர், மில்காலணி, இந்தியன் ஆயில், கேஸ் கம்பெனி ஆகிய பகுதிகளுக்கு 04.01.2025 தினம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்பதை செயற்பொறியாளர் P.முத்தரசு  தெரிவிக்கின்றார்.