1. நெல்லையில் பெய்த கனமழை காரணமாக மேலப்பாளையம் கருங்குளத்தில் வயலில் வேலை பார்த்த நடராஜபுரத்தை சேர்ந்த முருகன் மனைவி முத்துமாரி (35), மற்றொரு முருகன் மனைவி பாலேஸ்வரி (30) ஆகிய இருவர் இடி தாக்கி பலி, மூதாட்டி வள்ளியம்மாள் (60) பாளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2. ”தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நாயை கம்பால் அடித்து கொன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்” - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நடவடிக்கை.
3. சிவகங்கை அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக பழமை வாய்ந்த மரங்கள் வெட்டப்படுவதால் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
4. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாலைக்கிராமத்தில் கோவிட்-19 சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி வந்தனர். அப்போது முகாம் நடைபெறும் இடத்தில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. தடுப்பூசி செலுத்தும் இடத்திற்கு வந்த பாஜகவினர் வைக்கப்பட்டிருந்த பேனரில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லை என்று கூறி அங்கிருந்த பேனரை அவிழ்த்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பணி செய்ய விடாமல் தடுத்ததாக மருத்துவர்கள் சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் கோவிந்தன் மற்றும் குட்டி என்பவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
5. மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சக்திவேல், கர்ப்பமடைந்த அவரது வளர்ப்பு நாய் சுஜிக்கு மனிதர்களுக்கு நடத்துவது போலவே வளைகாப்பு நடத்தினார். இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடை செய்துள்ளது.
6. ராமநாதபுரத்தில் கடந்த 3-ம் தேதி திருமணம் செய்ய மறுத்த அக்கா சுவாதியை அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பியோடி தலைமறைவான தம்பி 'சரவணக்குமார் என்ற சரண்' போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
7. தொடர்மழை காரணமாக தேனி அருகே உள்ள போடிமெட்டு மலைச்சாலையில் 10வது முறையாக நேற்றும் மண் சரிவு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டது.
8. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஜவாத்புயலை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் நேற்று மீண்டும் முதலாம் எண்புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
9. சிங்கப்பூரிலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த இவரது சளி மாதிரி ஒமிக்ரான் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
10. மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது, இலங்கை கடற்ப டையினர் பாட்டில்கள், கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 10 விசைப்பட குகளில் இருந்த வலைகளை அறுத்து கடலில் வீசி விரட்டிய சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.