தஞ்சாவூர் மற்றும் பழனி இடையே முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இன்று மற்றும் நாளை 6-ம் தேதி இயக்கப்பட உள்ளன. பழனியில் பங்குனி உத்திரத்தையொட்டி, தஞ்சாவூர் - பழனி இடையே இன்று (05.04.23) மற்றும் நாளை (06.04.23) சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூர்-பழனி முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில் தஞ்சாவூரில் இருந்து காலை 09.20 மணிக்குப் புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு பழனி வந்தடையும் எனவும்,
இந்த ரயில் பூடலூர், திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி,மணப்பாறை, ,திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் நிற்கும்.
பழனி-தஞ்சாவூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் பழனியில் இருந்து மதியம் 2.00 மணிக்கு புறப்படும். 6.15 மணிக்கு தஞ்சாவூரை வந்தடையும் எனவும் இந்த ரயில் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்,மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, திருவெறும்பூர் மற்றும் பூடாலூர் நிலையங்களில் நிற்கும். இந்த ரயிலில் 10 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், இரண்டு லக்கேஜ் கம் பிரேக் வேன் பெட்டிகளும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க - 'உச்சி பனை மரத்துக்கு நொடியில ஏறுவேன்.. ஆனா இன்னைக்கு நிலைமை' - பனை தொழிலாளி வேதனை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்