1. வங்கக்கடலில் உருவான சூறாவளியால் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீன்துறை தடை விதித்துள்ளது.

 

2. புத்தடி, வண்டன்மேடு, குமுளி, போடி உள்ளிட்ட பல இடங்களில் ஏலக்காய் ஆன்லைன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் வர்த்தகம் துவங்கி பல மாதங்களை கடந்தும் ஏலக்காய் விலை உயரவில்லை என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

 

3. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நிலபுரோக்கரை மிரட்டி ரூ.12 லட்சம், 48 பவுன் நகை பறித்த கார் டிரைவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

 

4. தமிழக வரலாற்றில் ஒரு முதலமைச்சர் கிராம சபையில் கலந்துகொள்வது இதுவே முதல் முறை.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நேற்று (2.10.2021) கலந்துகொண்டார் என்பது குறிப்பிடதக்கது. 

 

5. டாஸ்மாக் எதிரான வழக்கில், விதிமீ றல் உள்ளதா என புதுக் கோட்டைk லெக்டர் ஆய்வு செய்ய மனுதாரர் ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.

 

6. மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க தனி விமானத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் மதுரை வந்தார். அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

 

7. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மேல மாசி வீதியில் காந்தி மேலாடை துறந்த இடத்திலுள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து காதி கிராம விற்பனை நிலைய முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

 

8. தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

 

9. மதுரை அரசு மருத்துவ மனையில் பா.ஜ., இளை ஞரணி சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாளை யொட்டி 71 குழந்தைக ளுக்கு மோடி கிட் என்ற பெயரில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

 

10. மதுரை மாவட்டம் மேலுார் பகுதிகளில் தொடர் கன மழையால் நேற்று கேசம்பட்டி வெள்ளிமலைப்பட்டியில் பெரியகாளியா கண்மாய் மற்றும் முத்துக்கருப்பன்பட்டி பெருமாள் கண்மாய் கரையில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதமடைந்தது.