1.தென்மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு தலைமையில் தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட 6 மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
2. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காட்டு யானைகள் சேதப்படுத்தியதில் 5 கடைகள் சேதமடைந்தது. கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
3.அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் 2021-2023 ஆம் ஆண்டுக்கான மேம்படுத்தப்பட்ட ஓதுவார் பயிற்சிப் பள்ளி துவக்க விழா நடைபெற்றது. இதில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மீனாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்.
4. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்டனூர் பகுதியில் உள்ள கதர் கிராம நிறுவனம் 10 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த நிலையில் அக்டோபர்-2 தேதி திறக்கப்படும் என கார்த்தி ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
5.மதுரை புதூர் பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற தீனதயாள் உபத்யாயா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில்..," இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செயல்பாபு அல்ல; ஸ்நேக் பாபு. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பா.ஜ.கவின் கொள்கைக்கு ஆதரவாக எடப்பாடி பேசியுள்ளார்" எனவும் தெரிவித்தார்.
6.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஆர்.ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் நாற்காலியால் தாக்கி கொண்டனர். இதில் ஒருவருக்கு மண்டை உடைந்தது.
7.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கரையூர் மீனவ கிராமத்தில் சிறுமிக்க பாலியல் தொல்லை கொடுத்த சிறுமியின் பெரியப்பா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
8.”பாதங்களின் அளவுக்கு செருப்பு இருக்க வேண்டுமேயொழிய, செருப்புக்கு தகுந்தாற் போல பாதங்களை செதுக்க முடியாது. மாநில மொழித் தேர்ச்சிக்கு வழி செய்ய மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
9.'அ.தி.மு.க.வினர் கொரோனாவை காரணம் காட்டி, பொருட்கள் வாங்குவதற்கு பணத்தை அதிகளவில் செலவு செய்து அதிலும் ஊழல் செய்துள்ளனர்’- என கனிமொழி எம்.பி பாளையங்கோட்டையில் தெரிவித்தார்.
10.தேனி மாவட்டத்தில் நேற்று மட்டும் 11 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43379ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 6 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 42767-ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 517 இருக்கிறது. இந்நிலையில் 95 கொரோனா பாதிப்பால் தேனியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!