1. இன்று  செப்டம்பர் 27-ம் தேதி உலக சுற்றுலா நாளை முன்னிட்டு கீழடி பகுதியில் நடக்கும் அகழாய்வு பணிகள் மற்றும் கண்டெடுத்த பொருட்களை பார்வையில் பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், மணலுர், கொந்தகை ஆகிய பகுதிகளில் நடைபெறும் அகழாய்வு பணிகள் மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை பார்வையிட  கீழடியில் பொதுமக்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. கீழடிக்கு வாங்க என்ற தலைப்பில் தென் தமிழ்நாடு சுற்றுலா சங்கம் இணைந்து நடத்துதகிறது. கீழடியில் பொது மக்கள் ஆர்வத்துடன் வந்து ‌ கூட்டம் கூட்டமாக பார்வையிட தொடங்கியுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகளவு பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர்.

2. மதுரை மீனாட்சியம்மன் கோவில் வீர வசந்தராயர் மண்டபத்தை புனரமைக்க 10 கோடி மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளி வெளியீடு செய்துள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர். விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

3. தென்காசியில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் செய்யது இப்ராஹிமிற்கு, சமூக வலைதளத்தில் கொலை மிரட்டல் விடுத்தது குறித்து குற்றாலம் போலீசில் புகார் அளித்தார்.

4. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கரியாம் பட்டியில் தாய், மகன், மகள் என, ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5.வங்க கடலில் உருவான புயலால் பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை  கூண்டு ஏற்றப்பட்டது.

6. "மத்திய அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் தேசிய தரவு தளத்தில் (நேஷனல் டேட்டா பேஸ்) கட்டுமான தொழி லாளர்கள் உள்ளிட்ட 156 வகையான தொழிலாளர் கள் பதிவு செய்யலாம்,'' என, கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.  (https://esham.gov.in)

7. மதுரை மாநகராட்சி பகுதிகளில் நேற்று நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாமை காமை கார்த்திகேயன். பார்வையிட்டார். மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 18 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

8. மதுரை விரகனூரில் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திற்கு எதிரான வழக்கில் கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

9. மனக்குமுறலை ஆடியோவாக வெளியிட்ட திருநெல்வேலி எஸ்.ஐ.,யை டி.ஜி.பி., சைலேந்திரபாபு சந்தித்து உத்வேகம் அளிக்கும்படி பேசினார்.

10.ரவுடிகளை ஒழிக்கும் விதமாக நெல்லை மாவட்டத்தில் அரிவாள் செய்யும் பட்டறைகளை கண்காணிக்க  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவிட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதி மோதல்களை தடுக்கும் வண்ணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை செய்யும் பட்டறைகளை அந்தந்த பகுதிக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அரிவாள் செய்யும் பட்டறை முழுவதும் சி.சி.டி.வி கேமரா பொருத்த நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய வேண்டும். பட்டறைக்கு வந்து செல்கிறவர்கள் குறித்த முழு விபரங்கள் சேகரிக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.