10 ஆண்டுகளுக்கு முன்பு புதர்மண்டி சிதலமடைந்திருந்த கட்டிடங்கள், துருப்பிடிக்க கட்டில்கள், கதவுகள், துர்நாற்றம் வீசிய கழிப்பறைகள் கொண்ட மதுரை அரசு தொற்றுநோய்  மருத்துவமனை, இன்று கொரோனா சிகிச்சைக்கான ஹைடெக் அரசு மருத்துவமனையாக உள்ளது. இதற்கு காரணமானவர்களில் மிக முக்கியமானவர்  சமூக செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் ஆவார் என்பது அனைவரும் அறிந்ததே.    


இதுகுறித்து ஆனந்தராஜ் தனது முகநூல் பதிவில், "இந்த மாற்றத்திற்கு 2012ல் நான் தொடுத்த பொதுநல வழக்கும் ஒரு முக்கிய காரணமாக பங்காற்றியிருப்பது நெகிழ்ச்சியாக உணர்கிறேன். தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளும்  இதே போல் ஹைடெக் தரத்தில் மாற்றியே ஆகவேண்டும் இது காலத்தின் கட்டாயம்.




 


 


2011ம் ஆண்டு இப்பகுதி தன்னார்வு இளைஞர்கள் அளித்த தகவல் அடிப்படையில் இரவல் கேமிரா வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஆய்வு செய்ய பேருந்தில் சென்றிருந்தேன். திருமங்கலம் டூ மதுரை செல்லும் நானகுவழிச்சாலை கூத்தியார்குண்டு ஸ்டாப்பில் இறங்கினேன். அங்கிருந்து நடந்தே இலங்கை தமிழர குடியிருப்பு கடந்து ஆஸ்டின்பட்டி வழியாக 3கி.மீ தொலைவு சென்றடைந்தேன்.  


புதர்மண்டி சிதிலமடைந்திருந்த கட்டிடங்கள், துருபிடிக்க கட்டில்கள், கதவுகள், துர்நாற்றம் வீசிய கழிப்பறைகள், சரியான உணவு, தண்ணீர் கிடையாது. 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்திற்குள் நான்கைந்து தெரு விளக்கு மட்டுமே, இரவில் திகில் பிரதேசமாக மாறியிருக்கும்


 


 



10 ஆண்டுகளுக்கு முன்பு 


அங்கிருந்த சமூக அக்கறைக்கொண்ட பணியாளர் கூறியது மேலும் அதிரச்சி அளித்தது. நோயாளிகளுக்கு கஞ்சா சப்ளை செய்யப்படுவதும், பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை என்று மருத்துவமனை எப்படியெல்லாம் இருக்கக்கூடாதே அந்தளவிற்கு சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியிருந்தது. புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். கும்மிருட்டு மழைவேறு, நடந்து மெயின் ரோட்டிற்கு வந்த வீடு சேர்த்தது திகில் அனுபவம். 


புகைப்படங்கள் ஆதாரம் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் எத்தனை மருத்துவர்கள், செவிலியர்கள் இருக்கவேண்டும் என்று ஆதாரங்களை திரட்டினேன். பொதுநலவழக்கு தொடர்ந்தேன். வழக்கு எதிரொலி மருத்துவமனை சிறப்பு கவனம் பெற்றது. 



 


மேலும் மருத்துவர் காந்திமதிநாதன் சார் தலைமை மருத்துவராக அங்கு பணியமர்த்தப்பட்டார். சவாலான தருணத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். கல்லூரி NCC மாணவர்கள் உதவியுடன் தானும் களத்தில் இறங்கி இரவும் பகல் பாராமல் உழைத்தார். பல்வேறு தொழிற்சாலை அதிபர்களிடம் முறையிட்டு ஆதரவு திரட்டினார்.


இன்று தனியாருக்கு சவால் விடும் அளமிற்கு சுகாதாரமான படுக்கை வசதிகள்,  அதிநவீன  கிட்சன், ஆர்ஓ வாட்டர், ஹைடெக் சலூன், நூலகம், பூங்கா, தரமான மருத்துவ கவனிப்புகள் என்று முன்மாதிரி நட்சத்திர மருத்துவமனையாக உருவாக்கினார்.


வழக்கு சம்மந்தமாக ஆய்வு செய்ய செல்லும்போது ஆலோசனைகள் அளித்துவருவேன். பத்திரிக்கைகளில் பிரபலப்படுத்தினேன். தமிழக அரசின் சிறந்த மருத்துவமனை மற்றும் சிறத்த மருத்துவர் விருதுகள் அங்கீகரித்தன. 




 


இதெற்செல்லாம் முக்கிய காரணம் மருத்துவர் காந்திமதி நாதன் சார் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் உடனிருந்து செயல்பட்ட செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் தமிழ்ச்சமூகம் நன்றி கடன் பட்டுள்ளது


கடந்த 14ம் தேதி தமிழக அமைச்சர்கள் எம்.பி ஆகியோர் புதிய வார்டு திறப்பு விழாவிற்கு வருகை தந்ததோடு, மேலும் 500 கொரோனா சிறப்பு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 


கடந்த மே 16 அன்று அங்கு சென்றுவந்தேன்.  தனி ஆளாக 10 வருடங்களுக்கு முன்பு ஏதோ ஒரு நம்பிக்கையோடு பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே சென்று வந்தேன். இன்று விஐபிக்கள் வருகை தரும் நட்சத்திர அரசு மருத்துமனையாக உருவெடுத்துள்ளது.  இச்சமுதாயத்திற்கு ஏதோ என்னாலான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளேன் என்று நினைக்கும் போது கண்கலங்க வைக்கிறது" என்று பதிவிட்டுள்ளார் ஆனந்த்ராஜ்.


இந்த மருத்துவமனை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்திலிருந்து கூப்பிடும் தூரத்தில் தான் இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.