தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள கூடலூர் அருகே லோயர் கேம்பில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின் உற்பத்திக்காக லோயர் கேம்பில் உள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஜெனரேட்டரில் மின்சாரம் 42 மெகாவாட் எடுப்பதற்கு ஒரு ஜெனரேட்டருக்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது வழக்கம். ஆனால் ஆண்டுதோறும் மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் ஜெனரேட்டர்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த மாதங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம்.




இந்த நிலையில் தற்போது முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் மின் உற்பத்தி நிலையத்தில் நடைபெற்றுவந்த பராமரிப்பு பணிகள் முடிந்து, தற்போது லோயர் கேம்பில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் 2 ஜெனரேட்டர்களில் தலா  23 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.




நீர் வரத்து அதிகமாக இருப்பதால் மின் உற்பத்தி பெரிய அளவில் பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெருக்கடியான கோடை கால கட்டத்தில் இது போன்ற நீர் வரத்து எதிர்பாராத ஒன்று என்பதால், இதை பயன்படுத்தி மின்உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.