இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு அமைய வேண்டும் என்பதே என் ஆசை என மதுரை 293-வது ஆதீனம் தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றவர் உதய பெருமாள் கவுண்டர் - துப்பாக்கி
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் உள்ள திருநோக்கிய அழகிய நாதர் மருநோக்கிய பூங்குழலி அம்மன் கோயிலில், சுதந்திர போராட்ட வீரர் துப்பாக்கி கவுண்டர் என்ற உதய பெருமாள் கவுண்டருக்கு சிலை உள்ளது. மருதுபாண்டியர் படையில் துப்பாக்கி பிரிவில் தலைவராக இருந்து சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றவர் உதய பெருமாள் கவுண்டர். துப்பாக்கி சுடுவதில் வல்லவரான இவருக்கு துப்பாக்கி கவுண்டர் என்ற பெயர் உண்டு. திருப்பாச்சேத்தி சிவன் கோயிலில் இவருக்கு என தனி சன்னதி உண்டு. இதில் அவர் மறைந்த அக்டோபர் 5ம் தேதி சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவைகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் துப்பாக்கி கவுண்டரின் வாரிசுகள், பொதுமக்கள் வந்து அவரது சிலையை வணங்கி வழிபடுவார்கள்.
- வடகிழக்கு பருவமழை தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள... செயலியை அறிமுகம் செய்த கலெக்டர்!
மதுரை ஆதீனம் செய்தியாளர் சந்திப்பு
ஆண்டு தோறும் மதுரை ஆதீனமும் இந்த நினைவேந்தல் விழாவில் பங்கேற்பது வழக்கம். இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசுகையில்...,” இன்று வள்ளலார் தினம், வள்ளலார் சொன்னதை யாரும் கடைபிடிப்பது இல்லை. புலால் உண்ணாமை குறித்து திருவள்ளுவரும் சொல்லியுள்ளார். யாரும் கேட்பதில்லை. மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சிறைபிடிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு விடுவித்துள்ளனர். அவர்களை பாராட்டுகிறேன். மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி அவர்களுக்கு கோடிகணக்கில் அபாராதம் விதிக்கின்றனர். தற்போது இலங்கை அதிபர் இந்தியாவிற்கு சாதகமாக உள்ளார்., இதனை பயன்படுத்தி தமிழர்களுக்கு தனி நாடு அமைக்க வேண்டும் என்பதே என் ஆசை என்றார்.
சுதந்திர போராட்டத்தில் எங்கள் ஐயாவின் பங்கு அபரிதமானது - மதுரை ஆதீனம்
துப்பாக்கி கவுண்டரின் வாரிசுகளில் ஒருவரான செல்வவிநாயகம் கூறுகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 5ம் தேதி அவரது நினைவு நாளில் நாங்கள் இணைந்து விழா எடுக்கிறோம். சுதந்திர போராட்டத்தில் எங்கள் ஐயாவின் பங்கு அபரிதமானது. மருதுபாண்டியர் படைப்பிரிவில் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர் என்றார். துப்பாக்கி கவுண்டரின் நினைவேந்தலை முன்னிட்டு சிலம்ப போட்டியில் வென்றவர்களுக்கு மதுரை ஆதீனம் சான்றிதழ் வழங்கினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - திருமணத்திற்குச் சென்ற பேருந்து 200அடி பள்ளத்தில் விழுந்து விபத்து: 30 பேர் உயிரிழந்த சோகம்.! நடந்தது என்ன?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..