பொது இடத்தில் எடுத்த வீடியோவை பதிவிட்டு அரசுக்கு எதிராக கருத்தை பதிவிட்ட இளைஞர் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பார்களா? என சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.


அரசுக்கு எதிரான வாசகங்களுடன் சமூகவலைதளங்களில் பதிவிட்ட இளைஞர்


மதுரையில் சாலையில் பொது இடத்தில் பெண் காவலரை அடித்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்  வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டதால் பரபரப்பு. நானும் STAFF தான் என கூறி பெண்காவலருடன் வந்த நபரை மிரட்டி தனி நபர் பிரச்னையை அரசுடன் ஒப்பிட்டு அரசுக்கு எதிரான வாசகங்களுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞர்.


- மதுரை மாநகரில் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் - எப்போது? எங்கே? - முழு விவரம் இதோ


பெண் காவலர் மீது தாக்கும் வீடியோ


மதுரை மாநகர் தல்லாகுளம் பகுதியில் பெண் காவலர் ஒருவர் சாலையோரம் நின்று கொண்டிருந்த நிலையில் பைக்கில் அங்கு வந்த நபர் ஒருவர் திடீரென சாலையில் பொது இடத்தில் வைத்து பெண் காவலரை சரமாரியாக தாக்கியதாகவும்,  இதனை கண்ட இளைஞர் ஒருவர் அதனை தட்டி கேட்கும் போது நானும் STAFF தான் என போலீஸ் என்று கூறுவது போல பேசி அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனையடுத்து நான் 100க்கு போன் செய்து புகார் அளிப்பேன் வீடியோ பதிவு செய்த நபர்  கூறுவதும் ”நீ எங்குவேண்டுமானாலும் சொல்லிக்கொள்” - என கூறியபடி  அந்த நபர் பெண்காவலரை தனது பைக்கில் அழைத்துசெல்கிறார். அப்போது இவரைப்போன்ற கணவனோடு வாழ்வதற்கு சும்மாவே இருந்துவிடலாம் என கூறும் அந்த இளைஞர் இந்த வீடியோவை தனது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


வீடியோவை பதிவுசெய்த  இளைஞர் தானும் STAFF என கூறியுள்ளார்


பெண்காவலருடன் வாக்குவாதம் செய்த நபர் அவருடைய கணவராக இருக்கலாம் என தெரியவரும் நிலையில் இதுபோன்ற வீடியோவை பதிவுசெய்து காவல்துறையினரிடம் புகார் அளிக்காமல் தனது முகநூல் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளதால் பெண் காவலர் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை உருவாகும் என பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர். வீடியோவை பதிவுசெய்த  இளைஞர் தானும் STAFF என கூறியதால் அந்த இளைஞரும் காவல்துறையை சார்ந்த நபரா ? அல்லது  காவல்துறையினரை மிரட்டுவதற்காக கூறினாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


தனிபட்ட நபர்களின்  பிரச்னையை அரசை குறை கூறி பதிவிட்டுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது


மேலும் நடுரோட்டில் பெண் காவலரை அடிக்கும் அவலம் - கேடுகெட்ட ஆட்சி அதற்கு இதுவே சாட்சி என தனிபட்ட நபர்களின்  பிரச்னையை அரசை குறை கூறி பதிவிட்டுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொது இடத்தில் எடுத்த வீடியோவை பதிவிட்டு அரசுக்கு எதிராக கருத்தை பதிவிட்ட இளைஞர் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பார்களா? என சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Indian Israel Army: இஸ்ரேலால் அதிகரிக்கும் போர் பதற்றம் - இந்தியாவின் ராணுவ பலத்தை தாங்குமா? வெற்றி யாருக்கு?