சிவகங்கையில் நாளை முதல் அக்.31ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவதையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.


வரும் 24 ஆம் தேதி மருது பாண்டியரின் நினைவு தினம் மற்றும் 26ஆம் தேதி அவர்களின் குருபூஜை மற்றும் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை நடைபெறுவதையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, மரியாதை செலுத்த வருபவர்கள் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு வரும் பொதுமக்கள் அரசு கூறும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.