மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக மருத்துவர் நாகராஜன் வெங்கட்ராமனை மத்திய அரசு நியமித்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் துவங்கும் தேதி குறித்து தகவல் இல்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சமீபத்தில் பதில் அளித்திருந்தது. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தலைவரை மத்திய அரசு நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவரை நியமித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மதுரையில் உள்ள வி.என். நரம்பியல் சிறப்பு மருத்துவமனையின் தலைவராக உள்ள டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமனை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமனம் செய்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என 2015ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் தமிழகம் வந்து 5 இடங்களை ஆய்வு செய்துவிட்டுச் சென்றனர். பின்னர் மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்தியக் குழு ஒப்புதல் வழங்கியது. இதற்காக தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.