சிவகங்கையில் 10 வயது சிறுவனுக்கு நடைபெற்ற காதுகுத்து விழாவில் மகனின் ஆசைக்காக 45 வயது தந்தையும் அதே மேடையில் 2-வது முறையாக காதுகுத்திக்கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
தென்மாவட்ட விழாக்கள்
மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் என தென் மாவட்டங்களில் கல்யாணம், காதுகுத்து என சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்படும். புத்தாடை, கிடாய் வெட்டு என்று திருவிழா போல நடைபெறும். இந்நிலையில் சிவகங்கையில் மகனின் ஆசைக்காக தந்தை ஒருவர் 2-வது முறையாக காது குத்திக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையில் காதணி விழா
சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட மதுரை முக்கு பகுதியை சேர்ந்தவர்கள் சேகர் - செல்வராணி தம்பதியர். இவர்களுக்கு விஸ்வன்நாதன்ஸ் என்ற மகன் உள்ளார். சேகர் வெளிநாட்டில் பணிபுரிந்துவரும் நிலையில் செல்வராணி சிவகங்கை மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். சேகர் அண்மையில் சொந்த ஊர் திரும்பிய நிலையில் மகன் விஸ்வன்நாதன்ஸ்க்கு காதுகுத்து விழா நடத்த முடிவு செய்துள்ளனர். பத்திரிகை அடித்து தாய்மாமன் உட்பட அனைத்து சொந்தகளும் விழாவிற்கு அழைக்கப்பட்டனர்.
நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
இந்நிலையில் காதுகுத்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக மகன் விஸ்வன்நாதன்ஸ் தந்தையான சேகருக்கும் தன்னைப் போல காது குத்த வேண்டும் என அடம்பிடிக்கவே அதனை ஏற்றுக்கொண்ட தந்தை சேகர் மகனின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் அவரும் அதே மேடையில் காதுகுத்திக் கொண்டார். ஒரே மேடையில் 10 வயதான மகன் விவன்நாதன்ஸ் தனது தாய் மாமனான முனிஸ் மடியில் அமர வைத்து காது குத்தி முடித்தவுடன் அதனை தொடர்ந்து 45 வயதான சேகர் தனது தாய்மாமன் அருகே அமர்ந்து இரண்டாவது முறையாக தனது காதை குத்திக்கொண்டு தோடினை அணிந்துகொண்டார். மகனின் ஆசைக்காக தந்தையும் அதே விழா மேடையில் இரண்டாவது முறையாக காதுகுத்திக்கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - "அப்பா" போன்று நல் உள்ளத்துடன் உதவி வாழ்த்திய முதலமைச்சர் - புதுமண தம்பதி நெகிழ்ச்சி
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - திருமா சொன்னதை முதல்வர் ஸ்டாலினுக்கு Dedicate செய்கிறேன் - நக்கலடித்த செல்லூர் ராஜூ