சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே  அரளிப்பாறை கிராமத்தில் ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழாவின் 10 ம் நாளில்  மஞ்சுவிரட்டு நடைபெறும். முல்லைமங்கலம், சதுர்வேதி மங்கலம் , கணணமங்கலம் , சீர் சேர்ந்த மங்கலம் , வேழமங்கலம் ஆகிய ஐந்து நிலை நாட்டார்கள் சேர்ந்து மஞ்சுவிரட்டை தொன்று தொட்டு நடத்தி வருகின்றனர். அரசு அனுமதியுடன் தொழுவத்திலிருந்து சேவுகப்பெருமாள் கோயில் காளை அவிழித்துவிடப்பட்டதும் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட 131 காளைகள்  அவிழ்த்துவிடபட்டன.




முன்னதாக ஆங்காங்கே  வயல்வெளிகளில் காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டதில் காளைகள் ஆங்காங்கே சீறி பாயந்தன. கூட்டத்தில் பாய்ந்த காளைகளால் பலர் காயம் அடைந்தனர். கீழையூரை சேர்ந்த  சுந்தரம் (60 ) என்ற பார்வையாளர் வயிற்றில் காளை குத்தியதில், அவர் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் சென்ற நிலையில், சிகிச்சை பலனளின்றி அவர் உயிரிழந்தார்.


காளைகள் தரி கெட்டு முட்டித்தள்ளியதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த 110 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 20 க்கும்  மேற்பட்டோர் மேல் சிசிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரளிப்பாறை மஞ்சுவிரட்டை சினிமாவுக்கு பயன்படுத்த ஒளிப்பதிவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 




அதற்கான கேமரா உள்ளிட்ட யூனிட் வைக்கப்பட்டிருந்தது. அப்போது, அந்த பகுதியில் காளைகள் பாய்ந்ததால், கேமராமேன்கள் இருவர் படுகாயம் அடைந்தனர். கேமர உள்ளிட்ட சாதனங்களும் சேதமடைந்தன. இதைத் தொடர்ந்து உடனடியாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த சினிமா வாகனங்கள், அங்கிருந்த புறப்பட்டன. களேபரமாக காட்சியளித்த அந்த பகுதியில், காளைகளை கட்டுப்படுத்த நீண்ட நேரம் ஆனது.




ஒவ்வொரு ஆண்டும், காளைகள் அவிழ்ப்பதில் இதே நிலை தொடர்கிறது. ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு கொண்டாடும் இந்த விழாவை, முறைப்படுத்தி பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை நீடிக்கிறது. 


சிறப்பு மிக்க இந்த திருவிழாவில் நடைபெறும் இந்த மஞ்சுவிரட்டு போட்டி, மிகவும் சுவாரஸ்யமாகவும் , ரசிக்கும்படியாகவும் இருக்கும். காளைகளின் சேட்டைகள், வீரம், துள்ளல், பாய்ச்சல் என எல்லாமே கண்ணுக்கு இனிமையான விருந்தளிக்கும். கால் வைக்க இடம் இல்லாத அளவிற்கு நெருக்கமான பார்வையாளர்கள் இருப்பார்கள். பாரம்பரிய விழாவாக நடைபெறும் அரளிப்பாறை மஞ்சுவிரட்டை, இனி வரும் ஆண்டுகளில் இன்னும் ஒழுங்குபடுத்தி சிறப்பாக நடத்த அரசு முன்வர வேண்டும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண