நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு சேகரிப்பு தமிழகத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 100 வார்டுகளை கொண்ட மதுரை மாநாகராட்சி வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகளும் சுயேச்சை வேட்பளர்களும் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர். தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்கள் துணையோடு வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சி 32-வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க பெண் வேட்பாளர் நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையில் 32- வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க., பெண் வேட்பாளர் சுகந்தி அசோக் பல்வேறு விதமாக தினம் தோறும் நூதன பிரச்சாரங்கள் நடத்தி வருகின்றார். இந்நிலையில் அவரது மகன்களான ரிஷ்வந்த் , ரித்விக் ஆகிய இரண்டு பேரும் கண்களை கட்டிக் கொண்டு தனது தாயாருக்காக நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். ரிஷ்வந்த், ரித்விக் ஆகிய இருவரும் தான் பயின்றுவரும் செவன்த் சென்ஸ் மூலம் வாக்கு சேகரிப்பின் போது வாக்காளர்கள் அணிந்து வந்த உடை, அவர்கள் கையில் வைத்திருந்த பொருள்கள் மற்றும் செல்போன்களில் உள்ள புகைப்படங்களை அடையாளம் கண்டு வாக்காளர்களிடம் கூறியது வாக்காளர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வரவேற்பை பெற்றது. அவர்கள் வாக்கு சேகரிப்பின் போது , தங்களைப் போன்று கண்களை கட்டிக் கொண்டு 19 ஆம் தேதி வாக்களிக்க வேண்டாம் என்றும் கண்களை நன்றாகத் திறந்து மக்களுக்கு சேவையாற்றுபவர்கள் யார் என்று கண்டறிந்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினர். மேலும் அ.தி.மு.க அரசு மக்களுக்கு செய்த பல நலத்திட்டங்களை எண்ணிப்பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளரின் இரண்டு மகன்களான ரிஷ்வந்த், ரித்விக் இரண்டு பேரும் கண்களில் கட்டிய துணியை எடுக்காமல் தெருக்களில் நடந்து சென்றும் , மாடிப்படிகளில் ஏறி இறங்கி வாக்காளர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து வாக்கு சேகரித்து வாக்காளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. மதுரை மாநகராட்சி 32 வார்டுக்கு உட்பட்ட பி.டி.ஆர் மெயின் ரோடு, இந்திரா நகர், அண்ணாநகர் சொக்கிகுளம், ராமமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க அரசு மக்களை பொய் வாக்குறுதியை கண்களை கட்டியது போல் மக்கள் ஏமாற வேண்டாம் என்று தனது மகன்களை வைத்து இப்படி நூதன முறையில் பிரச்சாரம் செய்ததாக அ.தி.மு.க வேட்பாளர் சுகந்தி அசோக் தெரிவித்தார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Local Body Election: | 'போட்டியின்றி தேர்வாக ஆசைப்படுகிறார்கள்; ஜனநாயகத்தை காக்க வேண்டும்' : சுயேட்சை வேட்பாளருக்கு தொடரும் மிரட்டல்?