வேட்பாளரின் பேனா காணவில்லை, கண்டு எடுத்தவர்கள் தரும்படி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


நான்கு முனைப் போட்டியில் தேர்தல் களம்


தேர்தல் பணிகள் சூடுபிடித்துவிட்ட நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களத்தில் உள்ளன. கூட்டணிக் கட்சிகள் இறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டு, வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளனர். வேட்புமனுத் தாக்கல் மார்ச் 21ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் தங்களின் சூறாவளிப் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டனர். இதில் வேட்பாளர்கள், மக்களுக்குப் பணம், பொருட்கள் பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் வகையில், தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.


பா.ஜ.க., முக்கிய வேட்பாளர்கள்


இதில் பா.ஜ.க., சார்பில், பா.ஜ.க., மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையிலும், தெற்கு சென்னையில் தமிழிசை செளந்தரராஜனும், தெற்கு சென்னையில் வினோஜ் பி செல்வமும், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனும், நெல்லையில் நயினார் நாகேந்திரனும், நீலகிரியில் எல்.முருகனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் பா.ஜ.க., கூட்டணியில் சிவகங்கை தொகுதி வேட்பாளரான தேவநாதன் அவர்களின் வைரகல் பதித்த செண்டி மெண்ட் பேனா தொலைந்தது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கூட்டத்தில் காணாமல் போன பேனா


சிவகங்கை மக்களவை தொகுதியில், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பில், இந்திய மக்கள் கல்வி கழக நிறுவனர் தேவநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் முதல் நாள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் திருப்பத்தூருக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருகை தந்த, தேவநாதனுக்கு திருப்பத்தூரில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது காரில் இருந்து இறங்கிய வேட்பாளருக்கு பலரும் பொன்னாடைகள், மாலைகள் அணிவித்து வரவேற்பு கொடுத்தனர். அப்போது சட்டை பையில் சொருகியிருந்த பேனா தொலைந்துள்ளது. இதனையடுத்து வேட்பாளரின் பேனாவை காணவில்லை எனவும், அதை கண்டெடுத்தவர்கள் ஒப்படைக்கவும் என்று மைக்கில் அறிவிப்பு செய்தனர். இதனையடுத்து அந்த பேனா, விலை உயர்ந்த வைரம் பதித்த பேனா எனவும், அவரது செண்டிமெண்ட் பேனா எனவும் கூறப்படுகிறது. வேட்பாளரின் பேனா காணவில்லை, கண்டு எடுத்தவர்கள் தரும்படி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - DMK vs AIADMK vs BJP vs NTK: மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் 4 முனைகளில் போட்டியிடும் 160 வேட்பாளர்கள் யார் யார்? இதோ முழு பட்டியல்!


மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - DMK vs AIADMK vs BJP: அனல் தெறிக்கும் தேர்தல் களம்: 40 தொகுதிகளில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்கள் யார்?- முழு பட்டியல்